நெல்சன் இயக்கத்தில்நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் படத்தில் நடித்து முடித்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்ட பலர் இப்படத்தில்நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், அனிருத் இசையில் முதல் பாடல் அண்மையில் வெளியானது.
‘காவாலா’ எனத் தொடங்கும் இப்பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். ஷில்பா ராவ் பாடியுள்ளார். புஷ்பா படத்தில் வைரலான ‘ஊ அண்டாவா..’ பாடலை நினைவுப்படுத்தும் வகையில் அமைந்துள்ள காவாலா பாடலை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.