ஈரோடு திருநகர் காலனி கே.என்.கே. சாலையில் பிரசித்தி பெற்ற சத்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் நிர்வாகிகளாக இருந்து விழாக்களை நடத்தி வந்தனர்.இந்நிலையில் இந்த கோவிலை கடந்த சில நாட்களுக்கு முன் இந்து சமய அறநிலையத்துறைக்கு ஒப்படைக்கப்பட்டதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறிப்பிட்ட சமூகத்தினரும், பொதுமக்களும் இன்று காலை கே.என்.கே. சாலையில் திரண்டு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கருங்கல்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையிலான போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கோவில் எங்களுக்கு பாத்தியப்பட்டது. அறநிலையத்துறையினர் கோவிலை எடுக்க கூடாது வேண்டும் என வலியுறுத்தினர்.அப்போது போலீசார் உங்களது கோரிக்கை தொடர்பாக மனு அளியுங்கள். மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும் என்றனர். இதன்பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்ட த்தினால் கே.என்.கே. சாலையில் 30 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.