திருப்பூர் மங்கலம் ரோடு பூச்சக்காட்டில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. அந்த கோயிலுக்கு வந்த ஒரு போதை ஆசாமியை கோயில் குருக்கள் பூஜை செய்யும் மணியால் ஆசாமியை புரட்டி எடுத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மங்கலம் ரோடு பூச்சக்காட்டில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது. வாலிபர் ஒருவர் தன்னை வெட்ட வருகின்றனர் என கூறியபடி கோவிலுக்குள் நுழைந்தார். தொடர்ந்து, கருவறைக்குள் சென்று ஒளிந்து கொண்டார். தரிசனத்துக்கு வந்த பெண் ஒருவர், கோவில் நிர்வாகிகளிடம் கூறினார்.
இதையடுத்து கருவறைக்குள் சென்று ஒளிந்திருந்த நபரை வெளியே இழுந்து வந்து தர்ம அடி கொடுத்தனர். கோயில் குருக்கள் பூஜை செய்யும் மணியால்
ஆசாமியை வெளுத்தார். கஞ்சா போதையில் இருந்த வாலிபர், அடி தாங்க முடியாமல், தன்னை சிலர் வெட்ட வந்ததாக கூறினார். கோவில் நிர்வாகத்தினர் சென்ட்ரல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின், வாலிபரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று போலீசார் விசாரித்தனர்.
அதில், திருப்பூர், மங்கலம் ரோடு பாளையக்காட்டை சேர்ந்த கோகுல் பிரசாத், 23 என்பது தெரிந்தது. நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த சென்றார். போதையில் நண்பர்களுக்குள் தகராறு எழுந்த போது, கோகுல பிரசாத்தை பிடித்து தாக்கினர். அவர்களிடம் இருந்து தப்பி கோவிலுக்குள் ஓடி சென்றது தெரிந்தது. இவர் மீது, ஏற்கனவே வழக்குகள் உள்ளது. பழைய குற்றவாளி என்பதால் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.