மதுரை இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை கேரளாவில் தாமதமாக தொடங்கியது. இந்த நிலையில் தமிழகத்தின் பெரும்பா–லான பகுதிகளில் மேற்கு திசை காற்றின் மாறுபாட்டால் அவ்வப்போது மட்டுமே மழை பெய்து வருகிறது. ஆனால் அதே வேளையில் மதுரை உள்ளிட்ட சில மாவட்டங்களில் வெயில் கொளுத்தி வருகிறது. மேலும் அனல் காற்றும் வீசுகிறது.மதுரை–யில் கடந்த ஒரு வாரமாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தினசரி 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்ப நிலை பதிவாகி உள்ளது. மழையும் இல்லாத தால் வெப்பத்தின் தாக்கம் பகலிலும், இரவிலும் அதிகமாக உள்ளது. காலை முதலே வெயில் சுட்டெரிக்கிறது. வழக்கத்தை காட்டிலும் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.கோடை காலம் முடிந்து தென்மேற்கு பருவ மழை தொடங்கிய நிலையில் வெயிலின் தாக்கம் படிப்படி யாக குறையும் என பொது மக்கள் எதிர்பார்த்த நிலை யில் வெயில் தொடர்ந்து வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.இந்த நிலையில் அடிக்கடி மின்வெட்டும் ஏற்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதனால் வயதானவர்கள், குழந்தை–கள் அவதிப்படுகின்றனர். வெயிலின் தாக்கம் குறையாததால் கூழ், இளநீர், மோர், குளிர்பான கடைகளில் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. இதற்கிடையே தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.