தீரன்.மு.சின்னசாமியின் நினைவு தினம் ஈரோடு மற்றும் மொடக்குறிச்சி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் முத்தமிழறிஞர் டாக்டர்.கலைஞர் அவர்களின் உற்ற தோழருமான ஈரோடு மு.சி (எ) மு.சின்னசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு,நினைவிடத்தில் திமுக கழக நெசவாளர் அணி செயலாளர் SLT.ப.சச்சிதானந்தம் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் இளைஞரணி துணை செயலாளர் கே.இ.பிரகாஷ், மொடக்குறிச்சி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கதிர்வேல், மொடக்குறிச்சி தெற்கு ஒன்றிய கழக செயலாளர் விஜயகுமார், மொடக்குறிச்சி பேரூர் கழக செயலாளர் சரவணன், மற்றும் ஒன்றிய, கழக, ஊராட்சி கழக,இளைஞர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.