தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கம்,15.08.1968-ல் தொடங்கி 55-ஆண்டுகள் நிறைவடைந்து, 56-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு சங்க முன்னோடிகளைப் பற்றியும், சங்கம் கடந்து வந்த பாதையை புதிய உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் விதமாகவும், ஈரோடு மாவட்ட கிளைச் சங்கம் சார்பாக ஈரோடு கிளை தலைவர் மணி மேகலை, மற்றும் கிளைசெயலாளர் மணிகண்ட குமார், ஆகியோர் தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மத்திய சங்கத்தின் மாநில இணைப் பொதுச் செயலாளர் இரா. செந்தில்குமார் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் அனைத்து உறுப்பினர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதைதொடர்ந்து ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கு.ஜவகர் இ.கா.ப., மற்றும் நிர்வாக அதிகாரி செ.ரகு ஆகியோர்களை சங்க உறுப்பினர்கள் மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து இனிப்புகள் வழங்கி, பொன்னாடை போர்த்தி கௌரவித்து வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டனர்.