தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக வின் முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 5ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்த நினைவு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் திமுக வினர் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில், ஈரோடு தெற்கு மாவட்ட திமுக சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது. இதில் தமிழக வீட்டுவசதி மற்றும நகர்ப்புற வளர்ச்சி அமைச்சரும், மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான முத்துசாமி கலந்து கொண்டு ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். பன்னீர் செல்வம் பூங்காவில் இருந்து துவங்கிய இந்த பேயணியானது, மணிக்கூண்டு, சத்தி ரோடு, பேருந்து நிலையம், மேட்டூர் ரோடு என நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, முனிசிபல் காலனியில் உள்ள கலைஞர் சிலை வளாகத்தில் நிறைவடைந்தது. இதனையடுத்து முனிசிபல் காலனியில் உள்ள கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த அமைதி ஊர்வலத்தில் திமுக நிர்வாகிகள் மற்றும உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்