காமராஜர் 121 வது பிறந்தநாளை யொட்டிதிருமழிசைநகரத்தலைவர் டி.எஸ்.அய்யாதுரைநாடார்தலைமையிலும்செயலாளர்ஏ.ராஜகனிமுன்னிலையில் விழா நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டம் தமிழ்நாடு நாடார் பேரவையின்சார்பில்காமராஜர்
121 வது பிறந்தநாளை யொட்டி திருமழிசைநகரத்தலைவர்டி.எஸ். அய்யாதுரைநாடார்தலைமையிலும்
செயலாளர் ஏ.ராஜகனி முன்னிலையில் விழா நடைபெற்றது.
விழாவில் தமிழ்நாடு நாடார் பேரவை தலைவர் என்.ஆர்.தனபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திருமழிசை ஊராட்சி ஒன்றிய அரசு பள்ளி மாணவ - மாணவிகளுக்கு தேவையான பொருட்களும் 8 வது வகுப்பில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் ஏழை பெண்களுக்கு புடவையும் ஆண்களுக்கு வேஷ்டி - துண்டு வழங்கி மாணவ மாணவிகளிடையே வினாடி - வினா நிகழ்ச்சி நடத்தினார்கள்.
விழாவில் நெல்லை தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத்தலைவர் போரூர் ஆனந்தராஜ், நாடார் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் மின்னல் எச்.ஸ்டீபன்,அகில இந்திய நாடார் மகாஜன சபை தலைவர் கே.எஸ்.எம்.கார்த்திகேயன்,மாங்காடு பெருந்தலைவர் காமராஜர் நல சங்க தலைவர் ராம பாண்டி நாடார், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவகுமார்,மாநில உயர் மட்டக் குழு உறுப்பினர் த.உதயகுமார், பொருளாளர் ராஜ் நாடார் இளைஞர் அணி செயலாளர் ரமேஷ்,விருகை தொகுதி தலைவர் மணிராஜ் தென் சென்னை தெற்கு மாவட்ட தலைவர் மடிப்பாக்கம் ரவி ,மடிப்பாக்கம் கிங்ஸ்டன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.