Type Here to Get Search Results !

தேசியநெடுஞ்சாலைத்துறைஆணைய அலுவலகத்தில் நேரில்சந்தித்து, சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ் சாலை (NH 544 ), பெருந்துறை புறவழி ச்சாலையில் (Bye Pass Road) சாலை விபத்துக் களைத் தவிர்க்க முன்னாள் எம்பிசுப்பராயன் நேரில் மனு

தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் தலைவர் (Chairman, NHAI) சந்தோஷ் குமார் யாதவ் IAS, திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.கே சுப்பராயன் நேற்று (31-07-2023) புதுடெல்லி, துவாரகாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அலுவலகத்தில் நேரில் சந்தித்து, சேலம் - கொச்சின் தேசிய நெடுஞ்சாலை (NH 544 ), பெருந்துறை புறவழிச்சாலையில் (Bye Pass Road) சாலை விபத்துக்களைத் தவிர்க்க, ஏற்கனவே கொள்கையளவில் ஒப்புக்கொள்ளப்பட்ட, முக்கிய இணைப்புச்சாலை சந்திப்புகளில், மேம்பாலங்கள் மற்றும் சர்வீஸ் ரோடுகள் அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் துவக்க வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கினார். 
அரை மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது இது குறித்து விரிவாக விளக்கினார். இதனை கவனமுடன் கேட்டுக்கொண்ட, NHAI சேர்மன் சந்தோஷ்குமார் யாதவ்  உரிய நடவடிக்கை எடுப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் கே.சுப்பராயன் உறுதியளித்துள்ளார் 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.