Type Here to Get Search Results !

மேகதாது ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்தும் ஈரோடு மாவட்ட பாஜக தலைவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவித்தனர்...

*காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு போதிய தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசின் நிலைப்பாட்டைக் கண்டித்தும், மேகதாது ஆற்றின் குறுக்கே அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்தும் ஈரோடு மாவட்ட பாஜக தலைவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவித்தனர்...

ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மொடக்குறிச்சி எம்எல்ஏ டாக்டர் சி.கே.சரஸ்வதி கூறுகையில்...

தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி ஜூன் மாதத்தில் 9.1 டிஎம்சி, ஜூலையில் 31 டிஎம்சி கர்நாடக அரசு தர வேண்டும் ஒரு ஆண்டுக்கு மொத்தம் 177 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா தமிழகத்துக்கு வழங்க வேண்டும். ஆனால், தற்போது மேட்டூர் அணைக்கு 120 முதல் 200 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில், அணையில் இருந்து டெல்டா பகுதிகளுக்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்றால் டெல்டா பகுதி வறண்டுவிடும் அணையில் தற்போதுள்ள தண்ணீர் அடுத்த 25 நாட்களுக்கு மட்டுமே போதுமானது. ஆனால், பெங்களூரில் நடந்த காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட போதும், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு கர்நாடக அரசிடமோ, காவிரி நதிநீர் ஆணையத்திடமோ முதல்வர் அழுத்தம் கொடுக்கவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் அவரது மௌனத்தைக் கண்டிக்கும் வகையில் பாஜக தலைவர்கள் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்துள்ளனர். காவிரியின் குறுக்கே பல அணைகள் கட்ட கர்நாடகாவுக்கு முதல்வர் கருணாநிதி அனுமதி அளித்தார். 

இப்போது முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தனது தந்தையின் கொள்கையை பின்பற்றுவதாக நேற்று கூறினார். மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரசுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதற்காக மக்களின் நலனைப் பலிகொடுத்து மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு முதல்வர் மறைமுகமாக ஒப்புதல் அளித்துவிட்டாரோ என்ற அச்சத்தை இது மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. நடிகை உடனடியாக காங்கிரஸ் ஆணும் கர்நாடக அரசை காவிரியில் தண்ணீர் திறந்து விடும் மாறும் மேகதாது அணை திட்டத்தை கைவிடுமாறும் முதல்வர் வலியுறுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

டேட்டின் போது பாஜக நிர்வாகிகள் பழனிசாமி சரவணன், வேதானந்தம் ரஞ்சித் கணபதி உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.