Type Here to Get Search Results !

முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சிநாள் விழா ஈரோடு மாநகராட்சிஎஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் கொண்டாடப்பட்டது.

 முன்னாள் முதல்-அமைச்சர் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சிநாள் விழா ஈரோடு மாநகராட்சிஎஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பள்ளியில் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் எம் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நன்கொடையாளர்கள், அன்பர்கள் அருள் கொடையாக வழங்கிய மாணவர் தினசரி குறிப்பேடு, பெல்ட், டை,ID card, மாணவர்கள் அங்கீகார பட்டை,Star of the month badge உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் மாமன்ற உறுப்பினரும் பள்ளி மேலாண்மை குழுவின் உறுப்பினருமான  ரேவதி திருநாவுக்கரசு அவர்கள் தலைமை தாங்கினார். மாமன்ற உறுப்பினர் மற்றும் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினருமான  பிரவீணா முன்னிலை வகித்தார். மரியாதைக்குரிய துணை மேயர் மதிப்புக்குரிய வி.செல்வராஜ்  கலந்துகொண்டு காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு அனைத்து மாணவ மாணவியர்களுக்கும் மாணவர் குறிப்பேடு, பெல்ட், டை, ஐடி கார்டு முதலியவற்றை வழங்கி சிறப்பித்தார். மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி மதிப்பிற்குரிய ஜோதி சந்திரா  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றி காமராஜர் பிறந்தநாள் விழா போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி சிறப்பித்தார். ஈரோடு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் அவர்கள் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் மாணவர் அடையாள அட்டை வழங்கினார். மழலையர் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் முதல் தர நிலை, இரண்டாம் தர நிலை பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஈரோடு மாவட்ட வட்டார கல்வி அலுவலர்கள்  மணிவண்ணன், பாரதி பாபு மாணவர்கள் அங்கீகாரப் பட்டை வழங்கி சிறப்பித்தனர். ஈரோடு மாவட்ட மூன்றாம் மண்டல தலைவர் சசி பெல்ட் ,டை வழங்கினார், சுப்பிரமணியன் , . திருநாவுக்கரசு , நன்கொடையாளர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விழாவில் மாணவர்களுக்கு டைரி, டை, பெல்ட் ஐடி கார்டு மற்றும் மாணவர்கள் அங்கீகார பட்டை முதலியவற்றை நன்கொடையாளர்கள் 
சங்கீதா சிதம்பரம், ஈரோட்டில் மண்டலத் தலைவர் சசிகுமார் ,ஈஸ்வரன்,கணேஷ், ஜெரோ, சித்திரை குமார்  முதலியோர் நன்கொடையாக வழங்கினர். பள்ளியின் முன்னாள் மாணவரும், ஸிக்மா டெக் உரிமையாளருமான  ராஜா கதிரவன் அவர்கள் சார்பில் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐந்து கம்ப்யூட்டர்களும், பள்ளியின் தமிழ் ஆசிரியை ரூபி மற்றும் அவரது கணவர் ரவி  ஒரு கம்ப்யூட்டரும் பள்ளி மாணவர்கள் உபயோகத்திற்காக வழங்கினர்.
முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் தலைமை ஆசிரியை கே சுமதி அவர்கள் வரவேற்றார். முடிவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர்  ஹேமலதா அவர்கள் நன்றி உரை கூறினார். விழாமுடிவில் அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.
கே.சுமதி, தலைமை ஆசிரியை, அனைத்து ஆசிரியைகள், பணியாளர்கள், எஸ்.கே.சி. ரோடு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.