Type Here to Get Search Results !

டாஸ்மாக் பிரச்சினையை ஒழுங்கு படுத்த முதலமைச்சர் உத்தரவிட்டு ள்ளார்- அதன்படி தான் பல்வேறுஆய்வுகள்நடக்கின்றன.அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக் பிரச்சினையை ஒழுங்குபடுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்- அதன்படி தான் பல்வேறு ஆய்வுகள்நடக்கின்றன.
அமைச்சர் முத்துசாமி
ஈரோட்டில் இன்று மது விலக்கு ஆய தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

டாஸ்மாக்கில் அதிக விலைக்கு மது விற்பனை செய்தல், தொழிலாளர்கள் பிரச்சனைகள், டாஸ்மாக் கடைகளில் இட வசதியின்மை போன்ற பல்வேறு பிரச்சினைகளை ஒழுங்கு படுத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
டாஸ்மாக்கில் பல்வேறு பிரச்சனைகள் உள்ளன. அதன்படி தான் பல்வேறு ஆய்வுகள் நடக்கின்றன. பத்திரிகையாளர்களிடமும் இது குறித்து கருத்து கேட்கிறோம். ஆனால் விமர்சனங்கள் தான் வந்து கொண்டிருக்கின்றன. எங்களது உணர்வுகளை புரிந்து கொண்டு நல்ல கருத்துக்களை தெரியப்படுத்த வேண்டும்.விரைவில் டாஸ்மாக் தொழிலாளர் சங்கங்களை அழைத்து பேசி அவர்கள் பிரச்சினைகளை தீர்க்க எண்ணி உள்ளோம். டாஸ்மாக் பார் குறித்த நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு பார்களுக்கான டெண்டர் விடப்படும். அதிக விலைக்கு மது விற்பது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து புகார் வந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஈரோடு சித்தோடு ஐ.ஆர்.டி.டி. பொறியியல் கல்லூரியில் 3 ஏக்கர் நிலம் எல்காட் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளோம். மேலும் 8 ஏக்கர் நிலம் வழங்க ஆய்வு நடக்கிறது.
எந்த தவறும் இல்லாமல் டாஸ்மாக் துறையை நடத்த வேண்டும் என்பது முதல்வரின் விருப்பமாக உள்ளது. கடையை தொடர்ந்து நடத்த வேண்டும் என்ற ஆசை யாருக்கும் இல்லை.

உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு உதவித்தொகை, இலவச பேருந்து, குடும்ப தலைவிக்கு உரிமைத்தொகை போன்று மகளிருக்கான திட்டங்கள் கொண்டு வருவது என்பது ஆண்களை மகளிர் பார்த்து க்கொள்வார்கள் என்பதால் மகளிருக்கு செய்கிறோம்.

டாஸ்மாக் கடையில் பணியாற்று பவர்களின் கொடுமையான சூழ்நிலை நேரில் பார்த்தால் தான் புரியும். இதனையெல்லாம் சரிசெய்ய அவர்கள் கொடுத்த கோரிக்கைகளை ஒருங்கிணைத்து ஒரு வார த்திற்குள் முடிவெடுக்க உள்ளோம். அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடியிடம் விசாரணை நடத்திய நிலையில் மீண்டும் அவரை விசாரணைக்கு அழைத்து இருப்பது என்பது ஒரு அரசியல் ரீதியான நடவடிக்கை. இது அவரை பாதிக்காது.
இவ்வாறு அவர் கூறினார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.