ஈரோட்டில் 200க்கும் மேற்பட்ட பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.....
நெய்வேலியில் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்தியூரில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
ஈரோடு வீரப்பன்சத்திரம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நெய்வேலியில் என்எல்சி நிர்வாகம் இரண்டாவது சுரங்கப்பாதை விரிவாக்க பணிக்காக இடம் கையகப்படுத்துவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு வீரப்பன் சத்திரத்தில் ஈரோடு மாநகர மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர்கள் எஸ் ஆர் ராஜு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது மதுக்கடைக்கு பாதுகாப்பு கொடுக்கும் தமிழக அரசே விவசாய மக்களின் விளைநிலங்களை பறிக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் எஸ் ஆர் பிரபு, மாநில து.தலைவர் வினோத்,மாநிலத் துணைத் தலைவர்கள் எஸ் எல் பரமசிவம், எம்.பி.வெங்கடாசலம், மாவட்ட து.செயலாளர் சேகர்.மாவட்ட து. தலைவர் கணேஷ், மாவட்ட இளைஞர் அணி தலைவர் தினேஷ்குமார், செயலாளர் தம்பிதுரை, மாவட்ட மகளிர் அணி முத்துலட்சுமி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்....பேட்டி எஸ் ஆர் ராஜு மத்திய மாவட்ட செயலாளர்