மிரட்டி குடும்பம் நடத்திய, போலீஸ்காரர் மீது, மனைவி புகாரளித்துள்ளார். ஈரோடு, சடையம்பாளையம், லட்சுமி கார்டனை சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 28; இவரின் கணவர் ஈரோடு, ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றிவருகின்றார்.இந்நிலையில் ஜெயலட்சுமி, ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம், இவருக்கு அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு கடந்த ஆண்டு அக்.,30ல் திருமணம் நடந்தது.
சந்தேகப்படுவது, வரதட்சனை கேட்டு தொல்லை கொடுப்பது, குடிபோதையில் வந்து சண்டையிடுவது என எட்டு மாதங்களாக துன்புறுத்தி வருகிறார்.
நான் பிரிந்து சென்றால், தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியதால், அவருடன் குடும்பம் நடத்தினேன். இனிமேலும் அவருடன் வாழ விருப்பமில்லை. எனக்கு அல்லது என் குடும்பத்தாருக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் என் கணவரே முழு காரணம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விசாரணை நடத்த, அனைத்து மகளிர் போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.