சிவபக்தர்கள் வேதனை..ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரையில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற சுந்தராம்பிகை சமேத சோழீஸ்வரர் கோயிலில் அண்மையில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து முதல்
சனி பிரதோஷ வழிபாடு நடந்தது.
இதில் வழக்கம்போல மகா கும்பாபிஷேக பணியை செய்த தனியார் நிறுவனமான துளசி பில்டர்ஸ் குடும்பத்தினர் சனி பிரதோஷ நிகழ்ச்சியை முழுமையாக ஆக்கிரமித்துக் கொண்டனர் அவர்களுக்கு இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் முன்னுரிமை அளித்தனர் இதனால் பக்தர்கள் முகம் சுளித்துக்கொண்டு ஈசனை வழங்கினர்.
நந்தி சிலை முன்பு துளசி பில்டர்ஸ் குடும்பத்தினர் மற்றும் கோயில் குருக்கள் முன்னாள் அறங்காவல் குழு நிர்வாகிகள் என அனைவரும் நின்று கொண்டு இறைவனை தரிசிக்க காத்திருந்த உண்மையான சிவ பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் முகம் சுளிக்கும் வகையில் நடந்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதில் சோழீஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு பல லிட்டர் பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் சாமியை வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.