ஈரோட்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையினை முழுமையாக நிறைவேற்றும் வகையில் வெள்ளமுத்துக்வுண்டன்வலசு பகுதியில் நடைபெற்று வரும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், ரூ.482.36 கோடி மதிப்பீட்டில் (குடிநீர் வடிகால் வாரியம் - ரூ.437.74 கோடி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - ரூ.44.62 கோடி) சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திலுள்ள 22 ஊராட்சிகளை சார்ந்த 434 குடியிருப்புகளுக்கான கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளை நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா சென்னிமலை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் காயத்ரி இளங்கோ, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் சிவகுமார் உட்பட பலர் உள்ளனர்.