மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பாக "அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானி யங்கள் ஆண்டு சுற்றுச் சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை திறன் இந்தியா மற்றும் டிஜிட்டல் இந்தியா " என்ற தலைப்பில் ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி இன்று ஈரோடு மாநகராட்சி திருமண மண்டபத்தில் துவங்கியது. கண்காட்சியை வருவாய் கோட்டாட்சியர் சதீஷ் ரிப்பன் வெட்டி குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மத்திய மக்கள் தொடர்புகள் அலுவலர் பிபின் எஸ் நாத் வரவேற்புரை ஆற்றினர். மத்திய பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் தென் மண்டல இணைஇயக்குனர் அருண் குமார் தலைமை வகித்து மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடினார். சிறப்பு விருந்தினர் வருவாய் கோட்டாட்சியர் சதிஷ் சிறப்புரை ஆற்றினார்.கல்லூரி மாணவ மாணவிகளும் கண்காட்சி தலைப்புகளில் பேசினார். நிகழ்ச்சியில் பாரத் சஞ்சார் நிகாம் பொது மேலாளர், அஞ்சல் கோட்டை கண்காணிப்பாளர் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ஈரோடு மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட மாவட்ட திட்ட அலுவலர் ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன இயக்குனர் பிரதமரின் மக்கள் மருந்தாக மத்திய பார்வையாளர் ஆயுள் காப்பீட்டுக் கழக முதுநிலை மேலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரையாற்றினர் பின்னர் சுற்றுச்சூழல், வனவிலங்கு மற்றும் சிறுதானியங்கள் குறித்த விழிப்புணர்வு கையேடு வெளியி டப்பட்டது. தொடர்ந்து கல்லூரிகளில் பல்வேறு தலைப்புகளில் நடத்தப்பட்ட ஓவியப்போட்டி மற்றும் பேச்சு போட்டிகளில் வென்றவர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கபட்டன. இக்கண்காட்சியில் இந்திய அஞ்சல் துறை, பிரதமரின் மக்கள் மருந்தகம், கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், மாவட்ட சமூக அலுவலர் மற்றும் காசநோய் அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் காலை மாலை என இரு அமர்வுகள் நடைபெறும். ஒவ்வொரு அமர்விலும் பல்வேறு துறைசார் வல்லுனர்களின் கருத்துரை, கலைநிகழ்ச்சிகள் மற்றும் பங்குபெறும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது சைபர் குற்றங்கள் மற்றும் பாதுகாப்பு, தொழில் மற்றும் ஆளுமை வளர்ச்சி, பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் மற்றும் மனநலம் மேடைப்பேச்சு குறித்த பயத்தை போக்குவது மற்றும் சிறப்பாக்குவது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் தினசரி நடைபெறு கிறது. இன்று துவங்கிய இந்த கண்காட்சி 28.07.2023 தேதி வெள்ளிக்கிழமை மாலை நிறைவு பெறுகிறது. பொதுமக்கள் அனைவரும் இக்கண்காட்சியினை தினமும் காலை பத்து மணி முதல் மாலை ஆறு மணி வரை இலவசமாக பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மத்திய மக்கள் தொடர்பு தொழில்நுட்ப உதவியாளர் எஸ்.ஆர். சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.
மக்கள் தொடர்பகம் சார்பில் ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி தொடக்கம் ஓவியப்போட்டி மற்றும் பேச்சு போட்டிகளில் நடைபெற்றது
July 29, 2023
0
ஈரோட்டில் சென்னை மண்டல மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில் ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி தொடக்கம் ஓவியப்போட்டி மற்றும் பேச்சு போட்டிகளில் நடைபெற்றது*.
Tags