கீழ்பவானி பாசன கால்வாயில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி கீழ் பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் வாய்க்காலில் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
ஈரோடு, திருப்பூர், கரூர், மாவட்ட விவசாயிகளின் முக்கிய நீர் ஆதாரமாக கீழ்பவானி பாசன கால்வாய் விளங்கி வருகிறது. 2.7 ஏக்கர் நிலம் பாசன வசதி பெரும் கால்வாயில் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தஅரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் விவசாயிகள் கான்கிரீட் தளம் அமைக்கும் திட்டத்திற்கு ஒரு தரப்பு ஆதரவும் பெரும்பாலான விவசாயிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்..
அதன்படி இன்று கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தினர் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை
கை விடுவதோடு மண்ணால் அமைக்கப்பட்ட கால்வாயை மண்ணை கொண்டு சீரமைக்க வேண்டும், அரசாணை 276 ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு அடுத்த பெருந்துறை வாய்க்கால் மேட்டில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டம்
கீழ்பவானி பாசன பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரவி தலைமையில் நடைபெற்றது.. இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.