மக்களை மதரீதியாக பிளவுபடுத்தி, நாட்டின் பன்முகத் தன்மையை சீர்குலைக்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு முரணாக பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒன்றிய பாஜக அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதை வரும் பாராளுமன்ற கூட்டத்தில் மதசார்பற்ற அரசியல் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சியின் தமிழ் மாநில தலைவர் நெல்லை.முபாரக் அவர்களின் கடிதத்தை ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் திரு.அ.கணேசமூர்த்தி எம்.பி., அவர்களை எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்து வழங்கினர்.
இச்சந்திப்பின் போது எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி.பாஷா, மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது, திருப்பூர் தெற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தாராபுரம் இஸ்மாயில், சையது அபுதாஹிர், ஈரோடு கிழக்கு தொகுதி செயலாளர் தளபதி.பசீர், ஈரோடு மேற்கு தொகுதி தலைவர் அப்துல் ரகுமான், செயலாளர் மஸ்தான், பவானி தொகுதி துணைத்தலைவர் அய்யூப் அலி, தாராபுரம் தொகுதி காளிபாளையம் பேரூராட்சி தலைவர் முகமது அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.