சீரமைப்பு வேலைகளை தடுப்பவர்கள் மீது உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி வழக்குப் போடு!
கீழ் பவானிக் கால்வாய் கடைமடை விவசாயிகளுக்கும் சொந்தமானது!
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள நீர்வளத்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தின் முன்முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கடைமடை விவசாயக் குடும்பத்து பெண்களும், ஆண்களும் உரக்க முழங்கினர்.
நீர்வளத் துறை அதிகாரிகளை
நிறுத்தி வைத்து கேள்வி கேட்டனர்.
பொறியாளர்களான நீங்கள் கால்வாயை அகழ்ந்து விட்டு மணல் மூட்டை அடுக்கி பாசனக் கட்டமைப்பை சீர்குலைக்கலாமா?
ஏன் இப்படி செய்கின்றீர்கள் விளக்கம் வேண்டும்.
கடைமடையில் உள்ள எங்களுக்கும் பிரதானக் கால்வாயின் அனைத்துப் பகுதிகளிலும் உரிமை உண்டு!
எனவே கால்வாய் கட்டமைப்பை பாதுகாப்பதற்கு சட்ட விதிகளின்படி நீர்வளத் துறை நடந்து கொள்ள வேண்டும்.
மாவட்ட அமைச்சர் சு.முத்துசாமி அவர்கள் சீரமைப்பு வேலைகளை முழுமையாக நிறைவேற்றுவதற்கு துணை நிற்க வேண்டும்!
இந்தக் கோரிக்கைகள் எல்லாம் நேற்றைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் சார்பாக அவரது உதவியாளர் இடத்திலும் நீர்வளத் துறையின் இரண்டு செயற்பொறியாளர்கள் மற்றும் கண்காணிப்பு பொறியாளரின் சார்பாக வந்திருந்த மூத்த அதிகாரிகளிடமும் மிகுந்த ஆவேசத்தோடு திரண்டு இருந்த விவசாயிகளும் விவசாய பெண்களும் எழுப்பினர் .
கடைமடை விவசாயிகள்
சமூகத்தில் விழிம்பு நிலை மக்களை நடத்துவதைப் போல நடத்தலாம் என்று ஆட்சியாளர்களும்.
வசதி படைத்த சட்டவிரோத தண்ணீர் திருடர்களும்நினைக்கின்றார்கள்.
.இந்த நிலையை நேற்றைக்கு எழுந்த உரிமை குரல் தகர்த்திருக்கிறது.
திரண்டு இருந்த மக்கள் வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினர்.
போராடும் மக்களின் சார்பாக மதிப்பிற்குரிய சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் தலைமையில் ஆர். எம். பழனிசாமி அவர்கள் உள்ளிட்ட குழுவினர் சென்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பேசினோம்.
இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்
சைபர் கிரைம் பிரிவில் புகார்களை வாங்க மறுப்பது குறித்தும்
எடுத்துச் சொன்னோம்.
நீர்வளத்துறை அளித்துள்ள புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டோம்.
மொடக்குறிச்சி காவல் நிலையத்தில் எழுமாத்தூர் பகுதியில் இரண்டு ஹிட்டாச்சி வாகனங்கள் உடைக்கப்பட்டதற்கு என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது என்ற விளக்கம் கேட்டோம்.
உயர் நீதிமன்ற தீர்ப்பை ஏன் காவல்துறை நடைமுறைப்படுத்தாமல் சுணக்கம் காட்டுகிறது இது நீதிமன்ற அவமதிப்பு ஆகாதா என்ற கேள்வியையும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன் எழுப்பி உள்ளோம்.
அனைத்துக் கருத்துகளையும் உள்வாங்கிக் கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அவர்கள
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஈரோடு மாவட்டக் காவல் துறை முழுமையாகப் பின்பற்றும் என்றும் தவறு செய்தவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
மேலும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ள புத்தர்கள் குறித்தும் தெளிவு படுத்தினார்.