Type Here to Get Search Results !

திருப்பூர் மாநகராட்சி புதிய தார்சாலை யில் தரமற்ற முறையில் போட்டு தரும் ஒப்பந்ததாரர் !.?பொது மக்களின் கோரிக்கை....

திருப்பூர் மாநகராட்சி  புதிய தார்சாலையில் தரமற்ற முறையில் போட்டு தரும்  ஒப்பந்ததாரர் !.?பொது மக்களின் கோரிக்கை....
திருப்பூர் மாநகரத்தில் மண்டல எண் 4 தமிழ்நாடு நகரப்புற கட்டமைப்பு திட்டம் நகரப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டம் 75, 90 லட்சம் மதிப்பீட்டில் தெற்கு தோட்டம் 1வீதி 2வீதி 3 , 4 , 5 ,6, புதிதாக அமைக்கப்பட்டுள்ள தார் சாலையில் திருப்பூர் மாநகராட்சி ஒப்பந்ததாரர் மீது பொது மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் மாநகராட்சி வருவாய் ஈட்டுவதில் தமிழகத்திலேயே முதல்வது இடத்தில் உள்ளது. மேலும் 60 வார்டுகளை உள்ளடக்கிய திருப்பூர் மாநகராட்சியில் சுமார் பல லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் தொகை கொண்டுள்ளது. இதனிடையே மாநகராட்சி கணேசன் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 52வது வார்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவசரகதியில் தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தார் சாலை மேலோட்டமாக போடப்பட்டதால் பாலம் பாலமாக பெயர்ந்துவருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சுமார் 75 , 90 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்டதாக கூறப்படும் இந்த தார் சாலை புதிதாக போடப்பட்ட சில நாட்களிலேயே பேந்து விடுவதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இது குறித்து பொதுமக்கள் கூறும் போது அவசரகதியில் சாலை பணியை மேற்கொண்டதாகவும், பணி மேற்கொள்ளும் போது கேட்டதற்கு முறையான பதில் கூற மறுத்ததாக கூறுகின்றனர். மேலும் போடப்பட்டுள்ள தரமற்ற தார் சாலைகளில் வாகன ஓட்டிகள் சேற்றில் இயக்குவது போல் வாகனத்தை இயக்கவேண்டியுள்ளதாகவும், பல இடங்களில் துடப்பத்தை வைத்து கூட்டி எடுத்தாலே சாலைகள் பெயர்ந்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே சாலைப் பணிகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகாரிகளிடம் சாலையின் தரம் குறித்து கேட்டதற்கு அரசாங்கம் வகுத்துள்ள விதிமுறைப்படித்தான் சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்கள். பெயரளவில் பொதுமக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் விதமாக தரமற்ற தார் சாலைகளை அமைத்ததோடு அதற்கு ஒரு விளக்கம் அளித்து அதிகாரி பேசி யது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தரமற்ற தார் சாலை அமைத்து அதன் ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு நீண்ட காலம் பயன்ப டுத்தும் விதமாக சாலையை அமைக் கவேண்டும் என்பதே அப்பகுதி பொது மக்களின் கோரிக்கையாகும்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.