கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்ட தண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள் ளது.காவிரி நீர் தமிழகஎல்லையானபிலிகுண்டுலுவை இன்றுவந்தடைந்து
தமிழக எல்லையை வந்தடைந்த காவிரி நீர் நீர் வரத்து அதிகரிப்பு
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டதண்ணீர் தமிழக எல்லையை வந்தடைந்துள்ளது.
காவிரி நீர் தமிழக எல்லையான பிலிகு ண்டுலுவை இன்று (25) வந்தடை ந்த நிலையில் நீர் வரத்து விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்துள்ளது.
கேரள மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணை களுக்கு வரும் உபரிநீரின் அளவு தொட ர்ந்து அதிகரித்து வருவதால் இரு அணைகளில் இருந்தும் சுமார் 15,000 கன அடிக்கு மேல் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த மூன்று நாட்க ளுக்கு முன்பு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் வெளியேற் றப்பட்டு வந்த உபரிநீர் இன்று (25) செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல்லை வந்தடைந்தது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தானது செவ்வாய்கிழமை காலை நிலவரப்படி விநாடிக்கு 1,000 கன அடியாக இருந்து வந்த நிலையில் கர்நாடக அணைகளின் நீர் திறப்பால் நீர்வரத்து மதிய 2 மணி நிலவரப்படி விநாடிக்கு 2500 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் இரு மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவை பொறுத்தவாறு கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில் நீர்வரத்தின் அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்