ஈரோடு அடுத்த சாஸ்திரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஶ்ரீநாத், இவர் அதே பகுதியில் வசிக்கும் இளைஞர்கள் இடையே கடுமையான உடல் வலிகளுக்கு பயன்படுத்தப்படும் மாத்திரைகளை போதைக்காக பயன்படுத்துவதோடு மற்ற இளைஞர்களுக்கும் அதனை விற்பனை செய்துள்ளார்..
ஶ்ரீநாத்தை கையும் களவுமாக பிடித்த சூரம்பட்டி காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் மேலும் ஏற்கனவே போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஹரிஸ் என்ற நபரிடம் இருந்து ஸ்ரீநாத் போதை வஸ்துகளை வாங்கியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
எனவே தலைமறைவாக உள்ள ஹரிஷ் என்பவரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்