பெருந்துறை சூரியம்பாளையம் தார் சாலை அமைக்கும் பணிக்காக பொதுப்பணி த்துறைக்கு சொந் தமான நிலத்தில் இருந்து மண்ணை பேரூராட்சி துணை தலைவர் தன் நிலத்துக்கு பயன்படுத்தாக கூறி பிஜேபி போலீஸ் புகார்
July 14, 2023
0
பெருந்துறை:பெருந்துறையை அடுத்துள்ள பெத்தாம்பாளையம் அருகே உள்ள கீழ்பவானி கால்வாயின் அருகே பொதுப்பணி த்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு சொந்தமான இடத்தின் அருகே பெத்தாம்பாளையம் பகுதியில் இருந்து சூரியம்பாளையம் பகுதிக்கு செல்ல புதிய தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தார் சாலை அமைக்கும் பணிக்காக பொதுப்பணி த்துறைக்கு சொந்தமான நிலத்தில் இருந்து மண்ணை பேரூராட்சி துணை தலைவர் தன் நிலத்துக்கு பயன்படுத்தாக கூறி அதிகாரிகள் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் ராயல் சரவணன் காஞ்சிக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரைத்தொடர்ந்து பெருந்துறை இஸ்பெக்டர் மசுதா பேகம் நேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார். தொடர்ந்து தங்கவேலுவிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் தப்பி ஓடி தலைமறை வானார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி 3 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
Tags