அதிமுக பொதுச்செயலாளர், மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் தஎடப்பாடி கே.பழனிசாமி ஆணைக் கிணங்க, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய விடியா திமுக அரசை கண்டித்தும், கழக அவைத்தலைவர் கலந்துகொண்டு கண்டனப் பேருரையாற்றினார்...
அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுவதைக் கண்டித்தும்,
இவைகளை எல்லாம் கண்டும் காணாமல் இருந்துவரும் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை கண்டித்தும்,
தென்காசி தெற்கு மாவட்ட கழக செயலாளர் திரு.S.செல்வமோகன்தாஸ் பாண்டியன் Ex.MLA., அவர்கள் மற்றும்
தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான ராஜா தC.கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா MLA அவர்கள் ஆகியோர் தலைமையில் தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது...
கழக அவைத்தலைவர் அ.தமிழ்மகன்உசேன் கலந்துகொண்டு கண்டன பேருரையாற்றினார்...
கழக அமைப்புச் செயலாளர் P.G.ராஜேந்திரன் Ex.MLA., , கழக மகளிரணி துணை செயலாளர், முன்னாள் அமைச்சர் V.M.ராஜலட்சுமி , முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர்KRP.பிரபாகரன், Ex.MP., உட்பட தென்காசி தெற்கு மற்றும் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்..