அமலாக்கதுறை சட்ட விதிகளின் படி தான செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது....
சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க கோரி அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, இரு வேறு தீர்ப்புகளை வழங்கியது. இதனால் வழக்கை விசாரிக்கும் மூன்றாவது நீதிபதியாகநீதிபதிசி.வி.கார்த்தி கேயன்நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்குநீதிபதிசி.வி.கார்த்தி கேயன் முன்பு கடந்த 12-ம் தேதி விசாரணைக்கு வந்தது. நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில், 3 நாள் விசாரணை நடைபெற்றது.
இருந்தரப்பு வாதங்கலையும் கேட்ட நீதிபதி இன்று தீர்ப்பு அளித்தார். அதன் விவரம் வருமாறு:-
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணைக்கு எந்த தடையும் கோர முடியாது, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்.
தான் குற்றம் செய்யவில்லை என்பதை செந்தில் பாலாஜி விசாரணை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும்.செந்தில் பாலாஜி சட்டத்துக்கு உட்பட்டவர் தான்.
கைது செய்யப்பட்டவர்களை விசாரணை அதிகாரிகள் விசாரணை காவலில் எடுக்க வேண்டியது அவசியம்.
பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பை உறுதி செய்தார் மூன்றவாது நீதிபதி சி.வி.கார்த்திகேயன். நீதிபதி பரத சக்கரவர்த்தியின் தீர்ப்பு சரியானது என்று உறுதி செய்தார் மூன்றாவது நீதிபதி சி.வி. கார்த்திகேயன்
அமலாக்கதுறை சட்ட விதிகளின் படி தான் கைது செய்துள்ளது என நீதிபதி கூறி உள்ளார்.