ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக வளாகத்தில் இன்று (18.07.2023) தமிழ்நாடு நாள் விழாவினை முன்னிட்டு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில், தமிழ்நாடு நாள் குறித்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் கன்கரா தலைமையில், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் அவர்கள் மற்றும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவெகிச.இளங்கோவன் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் திரு.சு.முத்துசாமி துவக்கி வைத்து தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 30.10.2021 அன்று தாய் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என போறிஞர் அண்ணா அவர்கள் பெயர் சூட்டிய ஜுலை 18-ம் நாளினையே தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் எனஅறிவித்தார்கள். அதன் அடிப்படையில் ஆண்டு தோறும் ஜுலை 18- ம் நாள் தமிழ்நாடு நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இவ்விழாவினை முன்னிட்டு மாநிலம் முழுவதும் உள்ள பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அழியும் வகையில், தமிழ்நாடு நாள் உருவான வரலாறு தொடர்பான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஈரோடு மாவட்டத்தில் தமிழ்நாடு நாள் சிறப்பான முறையில் கொண்டாடும் பொருட்டு, தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பல்வேறு பேச்சுப்போட்டிகள், கட்டுரை போட்டிகள் மற்றும் தமிழ்நாடு நாள் குறிக்க கருக்கரங்கம் ஆகியவை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, இன்றைய தினம் (18.07.2023) செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் தமிழ்நாடு நாள் குறித்து சிறப்பு புகைப்படக் கண்காட்சி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த புகைப்படக் கண்காட்சியானது இன்று (18.07.2023) முதல் 23.07.2023 வரை காலை 9.30 மணியளவில் தொடங்கி மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் மற்றும் மாணவு, மாணவியர்கள் பார்விையடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கண்காட்சியினை பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் அனைவரும் பார்வையட்டு தமிழ்நாடு நாள் குறித்த பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டு பயன்பெறுமாறும்,மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் வளர்ச்சிக்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன் செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக பெண்களின் நலனுக்காக பிற மாநிலங்கள் பின்பற்றும் வகையில் திட்டங்களை மேற்கொண்டு வருகிறார்கள், அதில் குறிப்பாக, மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து வசதி, பெண்களின் உயர்கல்வியினை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மகனிருக்கு மாதம்:தவர் ரூ.1,000/- வழங்கும் புதுமைப்பெணி திட்டம் உள்ளிட்ட திட்டங்களும், இதற்கெல்லாம்முத்தாய்ப்பாக பெண்களின் நலனுக்காக பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளான செப்டம்பர் 15 அன்று கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என்ற திட்டத்தினையும் பாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகம் முழுவதும் துவக்கி வைக்க உள்ளார்கள். மேலும், மகளிர் திட்டத்தின் சார்பாக ஏழை எளிய மகளிரின் நீடித்த நிலைத்த வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வங்கிகள் மூலம் கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் சுமார் 10.270 குழுக்கள் செயல்பாட்டில் உள்ளது. மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 3096 குழுக்கள் அமைக்கப்பட்டு மொத்தமாக 13366 குழுக்களுக்கு ரூ.1509,19 கோடி அளவிற்கு வங்கி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினம் (18.07.2023) ஈரோடு, பெருந்துறை. மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 28 மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ரூ.2.31 கோடி மதிப்பீட்டில் வங்கி கடனுதவி பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. கடனுதவி பெறுகின்ற பெண்கள் தங்கள் வாழ்வாதாரத்தினை பெருக்கிக் கொளண்டு எல்லா வளமும், எல்லா நலமும் பெற வேண்டுமென தெரிவித்தார்.
முன்னதாக,வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், தமிழ்நாடு நாள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பேரணியினை கொடியசைத்து துவக்கி வைத்து பேரணியில் பங்கேற்றார். இப்பேரணியானது குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் துவங்கி மாநகரின் முக்கிய சாலைகள் வழியாக ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தினை வந்தடைந்தது. இப்பேரணியில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர். மேலும், தமிழ்நாடு நாள் குறித்த விளம்பர பதாகைகள் கையில் ஏந்திக் கொண்டு பேரணி நடைபெற்றது.
தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல் பரிசாக ரூ.10,000/-, இரண்டாம் பரிசாக ரூ.7,000/- மற்றும் மூன்றாம் பரிசாக ரூ.5,000/- த்திற்கான காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) மைக்கேல், மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கஸ்தூரி, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர்கள் பழனிச்சாமி (1-ம் மண்டலம்) சுப்பிரமணியம் (2-ம் மண்டலம்), சசிகுமார் (3-ம் மண்டலம்), மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குழந்தை ராஜன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சு.செந்தில்குமார், உதவி திட்ட அலுவலர் பாஸ்கர், மண்டல மேலாளர்கள் செந்தில் (கனரா வங்கி), நாகேந்திரலி (எஎம்.பி.ஐ), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் ஆனந்தகுமார், ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார், உள்ளாட்சி அமைப்பு பிரதிநதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.