மகளிர் உரிமை தொகை வழங்கு வதற்கும் மது பானங்கள் விலை ஏற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.... முத்துச்சாமி பேட்டி...
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்காக கடந்த 2 நாட்களில் 1,20,837 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது. வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி -
ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட, செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் விண்ணாப்பம் பதிவு செய்யும் பையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செய்தியாளருக்கு ,நேற்று மாலை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆளுநரை சந்தித்து திமுகவினரின் சொத்து பட்டியல் வழங்குவது தொடர்பான கேள்விக்கு அவர் அவரது வேலையை செய்கிறார் நாங்கள் எங்களது வேலையை செய்கிறோம்.அவர் செய்யும் வேலை எல்லாம் நாங்கள் பார்த்து கொண்டு இருந்தால் எங்களது வேலை கேட்டு விடும் என்றார். தொடர்ந்து
மகளீர் உரிமை தொகை வழங்குவதற்கும் மதுபானங்கள் விலை ஏற்றத்திற்கு எந்த விதமான சம்பந்தமும் இல்லை.எல்லா மதுபானங்களுக்கும் விலைஉயர்த்தப்படவில்லை.அத்திக்கடவு அவிநாசி திட்டம் விரைவில் முடிக்கப்படும்.இன்னும் ஒரு வாரத்திற்குள் தேதி முதல்வரிடம் பேசி பின்னர் அறிவிக்கப்படும்..
தமிழ்நாடு முதலமைச்சர் , தமிழக மக்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்புடன்செயல்படுத்தி வருகிறார்கள். குறிப்பாக, பெண்களின் நலனில் மிகுந்த அன்பும், அக்கறையும் கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் , பெண்களின் நலன் சார்ந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதில் குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ், மகளிருக்கு மாதம் ரூ.1,000/- வழங்கும் திட்டத்தினை வருகின்ற 15.09.2023 அன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் துவக்கி வைக்க உள்ளார்கள். மேலும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், கடந்த 24.07.2023 அன்று கலைஞர்மகளிர்உரியைத்திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு மேற்கொள்ளும் முகாமினை தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கி வைத்தார்கள். மேலும், ஈரோடு மாவட்டத்தில் 1207 நியாய விலை அங்காடிகளில் உள்ள 7,67,316 குடும்ப அட்டைதாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பான முகாம் முதற்கட்டமாக 639 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 586 இடங்களில் 04.08.2023 வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெறுகிறது.
மேலும், இரண்டாவது கட்டமாக 568 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 544 இடங்களில் 05.08.2023 முதல் 16.08.2023 வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. ஈரோடு பாவட்டத்தில் இரண்டு கட்டங்களும் சேர்த்து 1207 நியாய விலை கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. இப்பணியில் இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னார்வலர்கள் 2183 நபர்களும், முகாம் பொறுப்பு அலுவலர்கள் 1130 நபர்களும்,
மண்டல அலுவலர்கள் 341 நபர்களும், மேற்பார்வை அலுவலர்கள் 113 நபர்களும் மற்றும் மாவட்ட அளவிலான 10 மேற்பார்வை அலுவலர்களும் என மொத்தமாக 3777 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், முதற்கட்டமாக, ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடர்பாக 24.07.2023 அன்று 50,577 வினர்ணப்பங்களும் மற்றும் 25.07.2023 அன்று 70,260 விண்ணப்பங்களும் என கடந்த 2 நாட்களில் 1,20,837 விளண்ணபங்கள் பெறப்பட்டுள்ளது என: தெரிவித்தார். மேலும், நியாயவிலைக்கடைகளின் மூலம் வழங்கப்பட்ட டோக்கன்களில் டோக்கன் நெம்பர், நாள் மற்றும் நேரம் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில் வருகை புரிந்து தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்யுமாறு தெரிவித்தார்.
தொடர்ந்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட செங்குந்தர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் கலைஞர் உரிமைத் திட்டம் தொடர்பான விண்ணப்ப பதிவு மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர் வைத்துறை அமைச்சர் அவர்கள், ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை யினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு மருத்துவமனை யின்உள்கட்டமைப்பினை மேம்படுத்து வது தொடர்பாகவும்மற்றும்மருத்துவ
மனை க்குநோயாளிகள் மற்றும் நோயாளிகளுடன் வருகை புரிபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கான இடம் மற்றும் அருகில் உள்ள மேம்பாலத்திற்கு இணைப்பு சாலை அமைப்பதுகுறித்தும் மருத்துவத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலத்துறை, தமிழ்நாடு மின்சார வாரியம் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர் களுடன் ஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வின்போது, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு-அம்பிகா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, நெடுஞ்சாலைத்துறை உதவி இயக்குநர் சரவணன், ஈரோடு வட்டாட்சியர் ஜெயக்குமார், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனர்.