கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என ஆதரவற்ற விதவைகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விண்ணப்பம் கொடுத்தனர்.கணவர் இறந்த பிறகு குழந்தைகளுடன் யாருடைய ஆதரவுமின்றி கூலி வேலைகளுக்குச் சென்று வருகிறோம். மிகவும் வறிய நிலையில் குடும்பத்தை நடத்த சிரமப்படுகிறோம். நாங்கள் 10ஆம் வகுப்பு முதல் உயர்கல்வி வரை படித்துள்ளோம். அத்துடன் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து வருகிறோம். மேலும் ஆதரவற்ற விதவை சான்றினையும் பெற்றுள்ளோம்.
இந்நிலையில், அரசு நடத்தும் போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்வதும், சுய தொழில் பயிற்சிகளில் பங்கேற்பதும் இயலாத நிலையில் உள்ளோம். எனவே, எங்கள் வறுமை சூழுலை கருத்தில் கொண்டு வயது வரம்பின்றி கருணை அடிப்படையில் அரசு வேலை வாய்ப்பினை அளிக்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பேர் மனு கொடுத்தனர்.