எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் வீட்டில் சோதனை நடத்திய தேசிய புலனாய்வு முகமை NIA-வை கண்டித்து ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்
SDPI கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் மற்றும் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் தஞ்சை.பாருக் ஆகியோர் வீட்டில் அத்துமீறி சோதனை செய்யும் ஒன்றிய அரசின் கைப்பாவையாக செயல்படும் தேசிய புலனாய்வு முகமை NIA-வை கண்டித்து இன்று தமிழகம் தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு தெற்கு மாவட்ட எஸ் டி பி ஐ கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா தலைமை தாங்கினார்.
இப்போராட்டத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் முகமது லுக்மானுல் ஹக்கீம், தமிழக மக்கள் முன்னணி பொறுப்பாளர் கண.குறிஞ்சி, திராவிடர் விடுதலை கழகத்தின் மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி, தமிழ் புலிகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன், நீரோடையமைப்பின் தலைவர் நிலவன், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநகர மாவட்ட தலைவர் செந்தில்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றி னார்கள்.இதில் மாவட்ட அமைப்பு பொதுச்செயலாளர் ஜமால்தீன், மாவட்ட செயலாளர்கள் சாகுல் ஹமீது முனாப் மாவட்ட பொருளாளர் ஃபர்ஹான் அகமது, ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள் சபீர் அகமது, செயலாளர் தளபதி பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.