சிறைவாசிகளுக்கு பொதுமக்கள் புத்தகங்கள் தானமாக வழங்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் பெயரில், தஞ்சை மாநகராட்சி அரண்மனை வளாகத்தில் புத்தகக் கண்காட்சி நடந்து வருகிறது இந்த புத்தககண்காட்சியில்சிறைவாசி
களுக்கு பொதுமக்களிடமிருந்து புத்தகங்கள் பெறப்பட்டு கொண்டி ருக்கின்றது அவ்வகையில் இன்று தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் I.A.S மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஸ் ராவத் I.P.S மற்றும் தஞ்சை நகர துணை காவல் கண்காணிப்பாளர் P.N.ராஜா மற்றும் தஞ்சை மேற்கு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் சந்திரா சட்டமன்ற உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் திருவையாறு மற்றும் தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி. கே. ஜி. நீலமேகம் மற்றும் தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் மற்றும் தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் மற்றும் தஞ்சை மாநகராட்சி துணை மேயர் மருத்துவர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குனர் சபீர்பானு மற்றும் பலர் உடன் இருந்தனர்.மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பள்ளி குழந்தைகள் என அனைவரும் இந்த சிறைவாசி புத்தக பெட்டகத்துக்கு தாங்கள் முன்வந்து தானமாக புத்தகங்கள் வழங்க வேண்டும் என்றும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளனர்.