Type Here to Get Search Results !

அந்தியூர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்பு-அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை.‌‌...

அந்தியூர் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால் நிலத்தடி நீர் பாதிப்பு-அறிவிப்பு பலகை வைத்து எச்சரிக்கை.‌‌...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள அத்தாணி பேரூராட்சிக்கு உட்பட்ட செம்புளிச்சாம் பாளையம் ஆவாரம் காட்டு தோட்டம் பகுதியில் ஒரு நார் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது.இந்த தென்னை நார் ஆலையில் இருந்து நிலத்தடி நீர் மற்றும் சுற்றுச்சூழல், விவசாய நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் விதிமுறைகளை மீறி கழிவுகள் வெளியேற்றப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் தேங்காய் மட்டைகளை குவித்து பரப்பி பதப்படுத்து வதற்காக நீரில் நனைத்து பின்பு கழிவு நீரை அப்படியே நிலத்தடியிலும் ஓடையிலும் விடுவதாக அந்த பகுதி மக்கள் புகார் கூறினர்.இதனால் செம்புளிசாம் பாளையம் பகுதியில் குடிநீர், பொது நிலத்தடி நீர், ஆழ்துளைக்கிணறின் நீர் மற்றும் சுற்றுவட்டார வேளாண்மை மக்களின் குடிநீர் ஆதாரங்களும் பகுதியில் உள்ளதால் கடுமையாக மாசடைய வாய்ப்புகள் உள்ளது என அவர்கள் கூறினர்.எனவே பொதுமக்கள் மற்றும் சுற்றுவட்டார விவ சாயிகள் ஏற்படும் இன்னல் களில் இருந்து பாதுகாத்து தடுத்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அத்தாணி பேரூராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.இதனை அடுத்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் அத்தாணி பேரூராட்சி அலுவலக வளாகத்தில் அறவழியில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த மனுவில் கூறியிருந்தனர். அந்த மனுவின் நகலை எம்.எல்.ஏ.வுக்கும் பொதுமக்கள் அனுப்பி வைத்தனர்.இதனை அடுத்து அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. பேச்சு வார்த்தை நடத்தி உடனடியாக அந்தப் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க நடவடிக்கை எடுக்கும்படி அறிவுறுத்தி னார்.அதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் அத்தாணி பேரூராட்சி பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.வெளியிடங்களில் இருந்து பொதுமக்க ளுக்கும் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுத்தும் தென்னை நார் கழிவுகளை அத்தாணி பேரூராட்சி கிராமப் பகுதிகளில் மற்றும் விவசாய நிலங்களிலும் கொட்டி வைப்பதை தடை செய்யப்பட்டுள்ளது.இதனை மீறும் வாகனங்களை பறிமுதல் செய்வ துடன் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படும் என பொது மக்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று அந்த அறிவிப்பு பலகையில் வாசங்கள் எழுதப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.