டாஸ்மாக் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை நிறுவனம் என அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.
டாஸ்மாக்கில் மதுபான விற்பனை சரிந்துள்ளது குறித்து, இன்று(ஜூலை 10) சென்னையில் அமைச்சர் முத்துசாமி தலைமையில் ஆலோசனை நடந்தது.
பின்னர் அமைச்சர் முத்துசாமி அளித்த பேட்டி:
உரிமம் வைத்திருப்பவர்கள் மட்டுமே பார் வைத்திருக்க முடியும். உரிமம் இன்றி பார் நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளுக்கடை திறப்பது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைக்க ஆலோசனை நடக்கிறது.
காலையில் வேலைக்கு செல்பவர்கள் மதுபானம் கிடைக்காமல் சிரமப்படுவதாக கூறுகின்றனர். இதற்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து ஆலோசனை நடக்கிறது. டாஸ்மாக் நிறுவனம் லாப நோக்கத்துடன் செயல்படவில்லை.
காலை 7மணி முதல் 9மணி வரை டாஸ்மாக் கடையை திறக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் வருகின்றன. டெட்ரா பேக்கில் மதுபானம் விற்கப்படுவதை மக்கள் விரும்புகின்றனர்.
டெட்ரா பேக்கில் மதுபானம் கொண்டு வந்தால் பாட்டில் பயன்பாட்டை குறைக்க முடியும். கண்ணாடி பாட்டில் மது பலருக்கு பிரச்னையாக உள்ளதால் டெட்ரா பேக்கில் மது கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.