ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் காவிரி ஆற்றில் அஸ்தி கரைப்பதற்காக படகு போக்குவரத்து சேவையை துவங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்ச்சியை ஈரோடு மாநகராட்சிஆணையாளர் ஜானகி ரவீச்சந்திரன் தலைமையில், ஈரோடு நகரமுக்கியபிரமுகர்கள்
மாநிலங்களவை உறுப்பினர்அந்தியூர் ப.செல்வராஜ் ,ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன்,துணைமேயர்ஈரோடுமாநகராட்சி செல்வராஜ், A.E விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டு முன்னிலை வகித்தார்கள்.
சக்தி மசாலா நிறுவனத்தின் துரைசாமி,சாந்தி துரைசாமி,
அக்னி ஸ்டில் பங்குதாரர்கள் . சின்னுசாமி, தங்கவேல் மற்றும்
கிராமப்புற மக்களுக்காக ரோட்டரி ஆத்மா நவீன எரியூட்டு வாகனத்தை சுமார் 35 லட்சம் மதிப்பீட்டில் ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை சார்பாக அறிமுகப்படுத்தி உள்ளது. கிராமப்புறங்களில் உள்ள மயானத்திலும் மற்றும் அவரவர்
சொந்தத் தோட்டத்திலும் தகனம் செய்வதற்காக இத்திட்டத்தினை அறிமுகப்படுத்தி உள்ளோம். ஈரோடு மாநகராட்சி குடியிருப்பு பகுதியில் எரியட்டு வாகனம் செயல்பட மாட்டாது. இத்திட்டம் மூலம் இறந்தவரின் உடலை ஒரு மணி நேரம் முதல் ஒன்னரை மணி நேரத்திற்குள் தகனம் செய்து தரப்படும். அங்கேயே அஸ்தியும் வழங்கப்படும். இதனால் கிராமப்புற மக்கள் சிரமம் இன்றி உடல் தகனம் நடைபெறும். இந்த வாகனத்தை பதிவு செய்ய ஆத்மா அலுவலக எண் Toll Free Number : 9655719666 மூலமாக பதிவு செய்து கொள்ளலாம். இதற்கு RS.7500/- கட்டணமாக வசூலிக்கப்படுகிறது ,என்பதை ரோட்டரி ஆத்மா அறக்கட்டளை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது. ரோட்டரி ஆத்மா படித்துறையில் அஸ்தியை கரைப்பதற்கு பொதுமக்களின் ஆலோசனைக்கு இணங்க காசி போன்று காவிரி ஆற்றின் மையப் பகுதியில் படகு மூலம் சென்று அஸ்தியை கரைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. குறிஞ்சி தண்டபாணி, சுந்தரராஜன், ராஜேஷ் ராஜப்பா , கவுன்சிலர் ராமச்சந்திரன், பி.கே.பழனிச்சாமி,காங்கிரஸ்ரவி,
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க மின் மயான அறக்கட்டளை டாக்டர்.சகாதேவன் நிறுவனர். ( நிறுவனர் ), தலைவர்வி.கே.ஆர் ராஜமாணிக்கம் , செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர்.எஸ்.சரவணன் , ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்கம் பிவிக்னேஷ்குமார் செயலாளர் , பி.சுரேஷ் பொருளாளர் , ரோட்டரி ஹார்ட் கேர் டிரஸ்ட் எஸ்.பாலசுப்பிர மணியன் செயலாளர் ,எஸ்.பரணிதர் பொருளாளர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்து இருந்தார்