7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் காது கேளாதோர்-வாய் பேசாதோர் உரிமைகளுக்கான அமைப்பினர் ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காவல்துறை அலுவலகம், தலைமை மருத்துவமனை மற்றும் அலுவலகங்களில் காது கேளாதோர்-வாய் பேசாதோர் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் சைகை மொழி பெயர்ப்பாளரை நியமிக்க வேண்டும். அரசாணை எண் 151ன்படி காது கேளாத - வாய் பேசாத ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். அரசு பணிகளில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் ஆன்ட்ரூஸ் பாபு தலைமை விகத்தார். மாவட்ட செயலாளர் சகாதேவன், பொருளாளர் ராஜு ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மாவட்ட பொறுப்பாளர்கள் ராதாகிருஸ்ணன், ஜெகதீஸ், நகர செயலாளர் செந்தில் மற்றும் திரளான மாற்றுத்திறனாளிகள் கோரிக்கை பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.