நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பாமப்பிரியா உள்ளிட்ட குழுவினர் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.இதில் 120 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டதில், சட்டத்திற்கு புறம்பாக அனுமதி பெறாமல் இயக்கப்பட்ட 3 கார்கள், 1 மேக்சி கேப், 3 கனரக சரக்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதிக வேகம், அதிக பாரம் ஏற்றி வந்தது, ஹெல்மெட் அணியாதது, செல்போன் டிரைவிங், சீட் பெல்ட் அணியாதது, சிக்னல்களை முந்துதல் மற்றும் குடிபோதையில் வாகனம் ஓட்டியது போன்ற குற்றங்களுக்காக 57 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டு, ஓட்டுனர் உரிமம் தற்காலிக தகுதி நீக்கம் செய்யப்பட்டது.இதுபோல் சட்டத்திற்கு புறம்பாக இயக்கப்படும் வாகனங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் எனவும், அவ்வாறு இயக்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் வாகனம் சிறை பிடிக்கப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திருச்செங்கோடு வட்டார போக்குவரத்து அலுவலர் சரவணன் எச்சரித்துள்ளார்.இதனிடையே கடந்த ஜூன் மாதத்தில் தொடர் வாகனத் தணிக்கை மேற்கொண்டதில் சுமார் 630 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு, 121 வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கப்பட்டது. வரி மற்றும் இணக்க கட்டணமாக ரூ.9 லட்சத்து 40 ஆயிரம் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.