இந்து சமயஅறநிலையத்துறையின் ஈரோட்டில்பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில் 27 இனைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணத்தினை மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கி வாழ்த்தினார்
ஈரோடு மாவட்டம் பண்ணாரி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறையின்27 இனைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணத்தினை நடத்தி வைத்து தலா ரூ.75,000/- மதிப்பில் ரூ.20.25 இலட்சம் மதிப்பீட்டில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்களைவீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயில் வளாகத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில், 27 இணைகளுக்கு (ஜோடிகளுக்கு) திருமணத்தினை மாவட்ட வருவாய் அலுவலர் ச.சந்தோஷினி சந்திரா தலைமையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஜி.வெங்கடாச்சலம் , மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சி.கே.சரஸ்வதி, ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி நடத்தி வைத்து தலா ரூ.75,000/- மதிப்பில் ரூ.20.25 இலட்சம் மதிப்பீட்டில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கிதெரிவிக்கையில்,
தமிழகம் முழுவதும் 600 இணைகளுக்கு (ஜோடிகள்) திருக்கோவில் நிதி மூலம் திருமணங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, ஈரோடு இந்து சமய அறநிலையத்துறை, இணை ஆணையர் மண்டலத்தில் 27 இணைகளுக்கு ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் திருக்கோயிலில் திருமணமும், திருக்கோயில் மண்டபத்தில் விருந்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், இலவச திருமண விழாவில் பங்கேற்கும் இணைகளுக்கு 4 கிராம் தங்க திருமாங்கல்யம் மணமக்களுக்கான பட்டு வேட்டி, பட்டு சட்டை, துண்டு, பட்டுபுடவை, ரவிக்கை, பெட்டி, இரும்பு கட்டில், மெத்தை, தலையணை, பாய், போர்வை, கிரைண்டர், கேஸ் அடுப்பு, மிக்சி, பீரோ, கை கடிகாரம், சாமிபடம், பித்தளை குத்துவிளக்கு-2, சந்தனக்கிண்ணம், குங்குமரியில், பித்தளை பூஜை தட்டு, பூஜை மணி, போவினி-2, 2 தட்டு, 2 சிறிய டம்ளர், 2 பெரிய டம்ளர், பால் காய்ச்சும் பாத்திரம், சொம்பு
மற்றும் 15 அழகு சாதன பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான சீர்வரிசை பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மதிப்பு இணை ஒன்றுக்கு ரூ.75,000/- என மொத்தம் ரூ.20.25 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படுகிறது. மேலும், ஒவ்வொரு இணைகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் 25 நபர்களுக்கு நேற்றும் (06.07.2023) மதியம் உணவு, சிற்றுண்டி, இரவு உணவு மற்றும் இன்று (07.07.2023) காலை சிற்றுண்டி மற்றும் மதிய உணவு ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. மேலும் மணமக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இன்றைய தினம் தங்கள் நல்வாழ்க்கையை தொடங்க வேண்டும் என வாழ்த்துகிறேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து மாண்புமிகு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் அவர்கள் இன்று திருமணம் நடைபெற்ற 27 ஜோடி மணமக்களுக்கு சீர்வரிசையினை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி, ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், நகர் மன்றத் தலைவர்கள் ஜானகி (சத்தியமங்கலம்), நாகராஜ் (கோபிசெட்டிபாளையம்), இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, துணை ஆணையர் மேனகா, உதவி ஆணையர்கள் அன்னக்கொடி, சுவாமிநாதன், இளையராஜா, இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் உட்பட கோவில் செயல் அலுவலர்கள், கோவில் ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.