ஈரோடு மாநகராட்சி 15 வது நிதிக்குழு திட்டம் 2021-2022 ஆண்டுக்கான நிபந்தனையுடன் கூடிய மானியத்தின் கீழ் திடக்கழிவு மேலாண்மை பணிக்கு 227 லட்சம் மதிப்பீட்டில் 33 வாகனங்கள் வழங்கும் விழா மாநகராட்சி வளாகத்தில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வீட்டு வசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய்வு தீர்வுத்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு புதிய வாகனங்களை கொடிசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்தபோது கீழ்பவானி பிரதான வாய்க்காலில் கட்டாயம் ஆகஸ்ட் 15ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என பேட்டி அளித்தார்.. ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவிச்சந்திரன், விஜயகுமார், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் துணை மேயர் செல்வராஜ். இளைஞர் அணி திருவாசகம்,இந்நிகழ்ச்சிக்கு முதலாம் மண்டலதலைவர்பழனிச்சாமி,கவுன்சிலர்கள் குணசேகரன், ராமச்சந்திரன், காங்கிரஸ் ரவி, செந்தில்,ஹாரி,பிரபு பல்வேறு கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்