Type Here to Get Search Results !

ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஆங்கில இலக்கியம்மாணவி எஸ்.ஜீவிதா மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார். (கணினி) மாணவி ஆர்.திவ்யா 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார்.கல்லூரிக்கும் பெருமை சேர்ந்த இந்த வீராங்கனைகளுக்கு கல்லூரி பாராட்டு

முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு போட்டிகள் சென்னையில் நடந்து வருகிறது. இதில் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கான பளு தூக்கும் போட்டி  நடைபெற்றது  ஈரோடு மாவட்டம் சார்பில் ரங்கம்பாளையம் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் ஈரோடு கலை அறிவியல் கல்லூரி ஆங்கில இலக்கியம் 3-ம் ஆண்டு மாணவி எஸ்.ஜீவிதா மாநில அளவில் 2-ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார். இதுபோல் பி.காம். (கணினி) மாணவி ஆர்.திவ்யா 3-ம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு பெற்றார்.
கல்லூரிக்கும் ஈரோடு மாவட்டத்து க்கும் பெருமை சேர்ந்த இந்த வீராங்கனைகளுக்கு கல்லூரி தாளாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் ரா.சங்கரசுப்பிரமணியன், இயக்குனர் ஆர்.வெங்கடாச்சலம், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மு.வெங்கடாச்சலம், பேராசிரியர்கள் ஏ.விஜயகுமுார், என்.ஏ.கிருஷ்ண மூர்த்தி, ஈரோடு மாவட்ட விளையாட்டு அதிகாரி சதீஸ்குமார், கல்லூரி உடற்கல்வி இயக்குனர் எ.தனலட்சுமி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.