காமராஜரின் ஆட்சியை பறை சாற்றும் விதமாக வருகின்ற 15ஆம் தேதி ஈரோடு திண்டலில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெறும்
மாநில துணை தலைவர் ஆறுமுகம், மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், சண்முகம், மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா, சந்திரசேகர், கவுதமன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதில்மாவட்ட தலைவர்கள் விஜயகுமார், பேட்டிஅளித்தார். காமராஜரின் ஆட்சியை பறைசாற்றும் விதமாக வருகின்ற 15ஆம் தேதி ஈரோடு திண்டலில் 25 ஆயிரம் பேர் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாட்டு பொதுக்கூட்டம் நடைபெறும் என்றும், ஆளுநருக்கு முதலமைச்சருக்கும் அரசியல் முரண்பாடு கருத்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஆளுநரும் முதலமைச்சரும் அரசியல் நிகழ்வுகளை விமர்ச்சிக்கமால் தமிழகத்தி வளர்ச்சி பாதையை நோக்கி முன்னிறுத்தி செயல்பட வேண்டும்.
முதலமைச்சர் எதற்கெடுத்தாலும் ஆளுநரை குறை சொல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சி பாதையை நோக்கி செல்ல வேண்டும். முதல்வர் ஆளுநருடன் சண்டை போடாமல் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் குறிப்பாக காவிரி நீர் பிரச்சினை உட்பட ஆரோக்கியமான அரசியலுக்கு துனை புரிய வேண்டும். காமராஜரின் பிறந்தநாளை கொண்டாடாமல் மாநில தலைவரை தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். மேலும் கூட்டணிக் கட்சிகளின் குழப்பங்களை தீர்ப்பதில் முனைப்பு காட்டி வருகின்றனர். இந்த மாநாட்டிற்கு விருதுநகர் தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து
மாநாட்டுச்சுடர் ஏந்தி வந்து தலைவர் ஜி கே வாசன் கையில் ஒப்படைக்க உள்ளனர். இந்த மாநாட்டை பொருத்தவரை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கு கால் கோல் விழாவாக நடைபெற உள்ளது.