Type Here to Get Search Results !

12 ராசிகளுக்கு ராசிபலன்

ராசி பலன்கள் அதிர்ஷ்ட காத்து அடிக்கப்போகும் ரசியினர்.. 
       இந்த வார ராசி பலன்கள்!
       24/07/2023 முதல் 30/07/2023
அதிர்ஷ்ட காத்து எந்த பக்கம் வீசப்போகுது என்று தெரியாத வகையில் கும்ப ராசியினர் சகல விதத்திலும் நன்மையை அனுபவிக்கப்போகும் வாரமாக இந்த வாரம் அமைகிறது.

24/07/2023 முதல் 30/07/2023 வரையான இந்த வாரத்திற்கான 12 ராசிகளுக்கு மான ராசிபலன்.

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மன நிம்மதியான வாரமாக இருக்கப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். எந்த பிரச்சனை வந்தாலும் அதை நேர் எதிராக சந்தித்து சமாளிக்கக்கூடிய தெம்பு உங்கள் மனதில் வந்துவிடும். யாரை கண்டும் அஞ்ச மாட்டீர்கள். எதிரிகளிடம் போராடி வெற்றி காண்பீர்கள். எல்லா விஷயமும் சரியாக நடந்தாலும் இந்த வார இறுதியில் கொஞ்சம் எச்சரிகாக இருக்க வேண்டும். முன்பின் தெரியாத நபர்களை நம்பாதீங்க. புதுசாக எந்த ஒரு காரியத்திலும் ஈடுபட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் தொந்தரவு கொஞ்சம் இருக்கும். முன்கோபத்தை அவர்களிடம் காட்டக் கூடாது. பொறுமையாக இருந்தால் நன்மை. இந்த வாரம் 27ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் இருக்கிறது. ஜாக்கிரதை. வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று இரண்டு நல்லெண்ணெய் விளக்கு போடுவது நன்மை தரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக்கூடிய வாரமாக இருக்கும். பிரச்சனைகள் எதுவும் பெருசாக இருக்காது. ஆனால் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். செலவு அதிகமாக இருக்கும். வருமானம் குறைவாக இருக்கும். அதிக வட்டிக்கு யாரிடம் கடன் வாங்காதீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க. உங்களுடைய பொருட்களை ஜாக்கிரதையாக வைத்துக் கொள்ளுங்கள். மனைவி சொல்வதைக் கேட்டு நடந்தால் நிச்சயம் கணவருக்கு வெற்றி. கணவர் சொல்வதைக் கேட்டு நடந்தால் நிச்சயம் மனைவிக்கும் வெற்றி. வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு கணவன் மனைவி இருவரும் சேர்ந்து சென்று குங்கும அர்ச்சனை செய்து விட்டு வருவது நன்மையை தரும்.

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பிரச்சனைகள் நிறைந்த வாரமாகத்தான் இருக்கப்போகின்றது. கையில் எடுத்த காரியம், எல்லாம் இழுபறியாக இருக்கும். ஏன் தான் இந்த வேலையை செய்ய வந்தோமோ என்று புலம்ப விட்டுவிடும். ஆகவே கூடுமானவரை இந்த வாரம் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அலைச்சலின் காரணமாக உடல் அசதியும் ஏற்படும். ஆரோக்கியத்தையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க. நேரத்திற்கு சாப்பிட்டு மனதை அமைதியாக வைக்க உங்களுக்கு பிடித்த அம்பாள் வழிபாட்டை தினமும் செய்யுங்கள்.

கடகம்:
கடக ராசி காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை தேவை. முன்கோபடக்கூடாது. வார்த்தைகளை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும். மௌன விரதம் கூட இருங்க. ஆனால் வாயைத் திறந்து சில விஷயங்களை பேசாமல் இருப்பது நல்லது. நல்ல மனிதர்களை இழக்க நேரிடும். ஆகவே சிந்தித்து செயல்படுங்கள். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சொத்து சேர்க்க இருக்கும் கடன் பிரச்சனை படிப்படியாக குறையும். மூன்றாவது நபர்களிடம் பழகும் போது ஜாக்கிரதையாக இருங்கள். எதிர் பாலின நட்பு பிரச்சனையை கொடுத்து விடும். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு அன்னதானம் செய்வது நன்மையை தரும்.

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பல வகையான பிரச்சனைகளில் இருந்தும் விமோசனம் கிடைத்து விடும். தலைமேல் பாரமாக இருக்கும் பிரச்சனைகளை இறக்கி வைக்க கூடிய நல்ல நேரம் வந்துவிட்டது. மன குழப்பம் நீங்கும். மனம் தெளிவு பெறும். இரவு நல்ல தூக்கத்தை பெறுவீர்கள். ஆனால் சீக்கிரமாக முன்னேறலாம் என்று குறுக்கு வழியை யோசிக்காதீங்க. நேர் வழியில் சென்றால் உங்களுக்கு எல்லாம் நன்மைதான். அடுத்தவர்களை குறை சொல்லும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை நிறுத்திக் கொள்ளுங்கள். கஷ்டம் என்று வரும்போது நண்பர்கள் சரியான நேரத்தில் உதவி செய்வார்கள். தினம் தோறும் துர்கை அம்மனுக்கு விளக்கு போட்டு வழிபாடு செய்வது நன்மையை கொடுக்கும்.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிக்கலான பிரச்சனைகளுக்கு எல்லாம் ஒரு விடை கிடைக்கும். நீண்ட நாள் சொத்து பிரச்சனை ஒரு தீர்வுக்கு வரும். நீண்ட நாட்களாக சொந்த பந்தங்களோடு இருந்த சண்டை சச்சரவு ஒரு முடிவுக்கு வரும். நீண்ட நாள் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வதற்கு கூட வாய்ப்பு உண்டு. ஆகவே இந்த வாரம் முழுவதும் உங்களுக்கு நல்ல காலம் தான். எதை நினைத்தும் கவலைப்பட வேண்டாம். ஆனால் உங்களுடைய குழந்தைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வீட்டில் இருக்கும் வயதானவர்களுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ஹாஸ்பிடல் சம்பந்தப்பட்ட வீண் விரைய செலவு வருவதற்கு கொஞ்சம் வாய்ப்புகள் உண்டு. வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மனுக்கு உங்கள் கையால் வேப்பிலை மாலை சாத்தினால் நன்மை நடக்கும்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எல்லாம் சரியாக நடக்கும். ஆனால் எல்லாம் லேட்டாக தான் நடக்கும். ஒரு சுறுசுறுப்பு இருக்காது. எல்லா விஷயத்திலும் ஏதோ தாமதம் ஏற்படுவது போலவே இருக்கும். கோர்ட் கேஸ் வழக்குகள் இருபரியாக இருக்கும். வரவேண்டிய காசு கைக்கு வந்து சேராது. இன்று நாளை, இன்று நாளை என்று சில நல்ல காரியம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். காரிய தடை உண்டாகும். கவலைப்படாதீங்க, நம்பிக்கையோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று ஒரு பூஜையை குடும்பத்தோடு செய்தால் எல்லா தடைகளும் விலகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக இருக்க போகின்றது வாரா கடன் வசூலாகும். வருமானம் பெருகும். செலவுக்கு பணம் கைக்கு கைக்கு வந்து சேரும். சந்தோஷம் தான். குடும்பத்திற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கக்கூடிய வாரம் இது. சொந்த தொழிலில் புதிய முதலீட்டை செய்யலாம். வியாபாரம் விருத்தி அடையும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும் வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு உங்களால் முடிந்தால் சர்க்கரை பொங்கல் செய்து கொடுத்து நிவேதனம் செய்து அன்னதானம் செய்யவும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் பிரச்சனைகள் முன்னும் பின்னும் தான் இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் கவனம் தேவை. யாராவது உங்களை ஏமாற்றி விடுவார்கள் ஆகவே கவனமாக இருந்து கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபரிடம் உங்களைப் பற்றிய எல்லா விவரங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். கொஞ்சம் ஜாக்கிரதை. பொருள் இழப்பு பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனைவியாக இருந்தாலும் கணவராக இருந்தாலும் அவர்களுடன் ஒரு எல்லைக்கோடு வைத்து பழகுங்கள். ஏனென்றால் சண்டை சச்சரவுகள் வந்துவிடும். பிறகு நிரந்தர பிரிவு கூட வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. அதை நினைத்து பயப்பட வேண்டாம். வார்தையை நிதானமாக பேசினாலே எல்லாம் நல்லதாக நடக்கும். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு, வரக்கூடிய சுமங்கலி பெண்களுக்கு உங்கள் வீட்டு குடும்ப தலைவியின் கையால் தாம்பூலம் தானம் கொடுப்பது நன்மையை தரும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பொறுமை கொஞ்சம் தேவை. முன்கோபட்டு எதற்கெடுத்தாலும் வார்த்தைகளை விடக்கூடிய பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். வார்த்தையை விட்டால் பின்பு அல்ல முடியாது. சொந்த தொழிலில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். பாட்னரை நம்பி எல்லாவற்றையும் ஒப்படைக்க வேண்டாம். முடிவுகளையும் நிதானமாக எடுக்க வேண்டும். மற்றபடி பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை‌. கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். வீட்டு பக்கத்தில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு சென்று எலுமிச்சம் பழம் மாலையை சாத்துவது நன்மையை தரும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டம் நிறைந்த வாரம் என்று தான் சொல்ல வேண்டும். நீங்கள் தவறாக ஏதாவது ஒரு வேலையை செய்தால் கூட அது உங்களுக்கு பாராட்டை தேடி தந்துவிடும். லாபத்தை தரும். அதிர்ஷ்ட காத்து எந்த பக்கம் வீசப்போகுது என்று தெரியவில்லை‌. கடன் சுமை படிப்படியாக குறைய போகிறது. வருமானம் படிப்படியாக உயரப் போகின்றது. குடும்பத்தோடு நேரத்தை செலவழிப்பீர்கள். வெளிநாட்டில் இருந்தவர்கள் தங்களுடைய குடும்பத்தோடு சேரும் நேரம் காலம் வந்துவிட்டது. ஒன்னு நீங்க வெளிநாட்டில் இருந்து தாயகம் வந்து சேருவீர்கள். இல்லை என்றால் தாய் நாட்டில் இருக்கும் உங்கள் குடும்பத்தை வெளிநாட்டுக்கு கூட்டிச் செல்ல போகிறீர்கள். சந்தோஷம் தானே. உங்களால் முடிந்தால் அம்மன் கோவிலுக்கு முடிந்த அன்னதானத்தை செய்யுங்கள். இந்த மாதம் 24 ஆம் தேதி உங்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது ஜாக்கிரதை.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் அலைச்சல் நிறைந்த வாரமாக தான் இருக்கப்போகின்றது. ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதிக ஈடுபாடு இருக்கும். இது ஆடி மாதம் அல்லவா. குடும்பத்தோடு நீங்கள் நினைத்தபடி அம்மனுக்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். வீட்டில் சந்தோஷம் பல மடங்காக உயரும். எது எப்படியாக இருந்தாலும் உங்களுடைய புத்தி சில சமயம் குறுக்கு வழியை பார்க்க தொடங்கும். எப்படி சீக்கிரம் பணக்காரர் ஆகலாம், அப்படின்னு யாராவது சொன்னா உடனே அவங்க பின்னாடி போகாதீங்க. உங்களை ஏமாத்திடுவாங்க. நேர் வழியில் வரும் பணம், கஷ்டப்படக்கூடிய பணம்தான் நிலைத்து நிற்கும் என்பதை மறக்காதீங்க. எவ்வளவு துன்பத்திலும் நேர்மையை உங்கள் ஆயுதமாக பயன்படுத்தினால் நிச்சயம் வெற்றி. இந்த வாரம் 25, 26 தேதிகளில் உங்களுக்கு சந்திராஷ்டமம் ஜாக்கிரதை

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.