ஈரோடு பவானி கூடுதுறையில் ஆடி அமாவாசையை முன்னிட்டு திதி,தர்ப்பணம் உள்ளிட்ட பரிகாரம் செய்ய 10ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் முக்கூடலில் புனிதநீராடி சாமி தரிசனம் செய்தனர்.
தென்னகத்தின் காசி என்று அழைக்கப்படும்
ஈரோடு மாவட்டம் பவானி நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவிலில் காவிரி ஆறு , பவானி ஆறு மற்றும் கண்ணுக்கு புலப்படாத அமுத நதி சங்கமிக்கும் இடம் ஆகும்.. இங்கே தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காகவும், திருமணம் தடை, தோஷம் உள்ளிட்ட பல்வேறு பரிகாரங்கள் செய்வதற்காக அமாவாசை உள்ளிட்ட தினங்களில் கூடுதுறையில் பரிகார பூஜைகள் செய்து தர்ப்பணம் கொடுத்துவிட்டு கூடுதுறை காவிரி ஆற்றில் நீராடி விட்டு செல்வது வழக்கம்.. இந்நிலையில் ஆடி அமாவாசையான இன்று நாமக்கல் சேலம் கோவை திருப்பூர் தர்மபுரி கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மட்டும் இன்றி ஆந்திரா கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தர்ப்பணம் மற்றும் பரிகாரங்கள் செய்ய வந்திருந்தனர்.இதையடுத்து கடந்த சில தினங்களாக காவிரி ஆற்றில் அதிகப்படியான நீர் சென்று கொண்டிருந்ததால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதுறை காவிரி ஆற்றில் தடுப்புகள் அமைத்து 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் ட. மேலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக திதி தர்ப்பணம் உள்ளிட்டவை கொடுப்பதற்காக தடை செய்யப்பட்ட நிலையில் இந்த ஆண்டு 10,000 மேற்பட்ட பொதுமக்கள் குவிந்தனர். இந்நிலையில் முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி ஆற்றில் இருந்து மின் மோட்டார்கள் மூலம் சமமான பகுதிகளில் தற்காலிக நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டு குளிப்பதற்காக வசதிகள் செய்யப்பட்டது.. ஆடி அமாவாசை தினமான இன்று 10,000 மேற்பட்ட பொதுமக்கள் கூடுதுறையில் குவிந்ததால் திருட்டு சம்பவங்களை தடுக்கும் வகையில் பவானி காவல்துறை சார்பில் 73 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டு வந்தனர் மேலும் பவானி தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர் அதேபோல் அவசர உதவிக்கு மருத்துவர் துறையினரும் கோவில் வளாகத்தில் தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டனர்.. திதி தர்ப்பணம் கொடுத்த பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கமேஸ்வரரை தரிசித்து சென்றனர்..