Type Here to Get Search Results !

ஈரோட்டில் முதன் முறையாக 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் வெகு உற்சாகத்துடன் பங்கேற்ற (1000) ஆயிரக்கணக்கான மக்கள்.. (பேரிக்காடை மக்கள் தூக்கி வீசினர்)

ஈரோட்டில் முதன் முறையாக 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் வெகு உற்சாகத்துடன்பங்கேற்ற(1000)
ஆயிரக்கணக்கான மக்கள்.. (பேரிக்காடை மக்கள் தூக்கி வீசிறி எரித்தனார்)
ஈரோடு பெரியார்நகரில் உள்ள 80 அடி சாலையில், ஜே.சி.ஐ. ஈரோடு சார்பில், ‘ஃபன் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி முதன் முறையாக நடைபெற்றது.
காவல் துறையினர் மற்றும் பொதுமக்க ளிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை, கோவை‌, திருச்சி மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை களில் காலைப் பொழுதில் இளைஞர் கள்,சிறுவர், சிறுமிகள் என அனைத்து தரப்பு மக்களும் சாலைகளில் விளை யாடி மகிழும் வகையில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' என்ற தலைப்பில் பல்சுவை நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ஈரோட்டில் இன்று முதன் முறையாக பெரியார் நகரில் உள்ள 80அடி சாலையில், போதைப்பொருள் ஒழிப்பை வலியுறுத்தி, 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி நடைபெற்றது. ஆடல், பாடல் 'ஃபன் ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய அரசு அதிகாரிகளான ஈரோடு ஆட்சித் தலைவர் ராஜகோபால் சுங்காரா, மாநகராட்சி ஆணையாளர், துணை மேயர் உள்ளிட்டவர்களும், போலீஸ் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.நிகழ்ச்சிகளில் அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டு ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள், சிலம்பம் சுற்றுதல்,தற்காப்பு ,கலைகள்,சைக்கிள் சாகசம்போன்றவிளையாட்டுகள்என
தனித்திறமைகளைவெளிப்படுத்தினார்.
பொதுமக்கள் மற்றும் போலீசார் இடையே நல்லுறவை வளர்க்கும் ஹாப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று ஆடிப்பாடி மகிழ்ந்தனர்..சமீப காலமாக சென்னை கோவை போன்ற பெரு நகரங்களில் போலீசார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் விதமாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது..ஞாயிறு தோறும் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் திரளான பொதுமக்களும் அதிகாரி களும் பங்கேற்று வீதிகளில் நடனமாடி மகிழ்வர். அதன்படி ஈரோடு பெரியார் நகர் 80 அடி சாலையில் ஜேசிஐ சங்கம் சார்பாக funStreetநிகழ்ச்சிநடைபெற்றது.
இதில் திரளான பொதுமக்களும் அதிகாரிகளும் பங்கேற்று நடனமாடி மகிழ்ந்து வருகின்றனர்..பேரிக்காடை மக்கள் தூக்கி வீசிறி எரித்தனார் கூட்டத்தைக் கட்டுப் படுத்த முடியாததால் குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சிக்கு முன்னால் அரை மணி நேரத்திற்கு முன்ன தாகவே இந்நிகழ்ச்சியை முடிக்கப்பட்டார்கள் 
குறிப்பாக இளைஞர் இளம்பெண்களும் அனைத்து தரப்புபொதுமக்களும்பங்கே ற்ற அவர்களின்தனித்திறமைகளை  பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்டி வருகின்றனர்...பார்வையாளர் களின் தங்களுக்கு விருந்தாகஅமையும் வகையில்நடைபெற்றுவரும்இந்நிகழ்ச்சி யில்ஆயிரக்கணக்கானபொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்
இந்த நிகழ்ச்சியில் இளைஞர்கள், இளம்பெண்கள்,குடும்ப தலைவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் 3000பேர்கலந்துகொண்டனர்
நாள்தோறும் எத்தனையோ விதமான சோகங்களை சுமந்து கொண்டு குடும்பத்தில் மகிழ்ச்சி என்பது அனைவருக்கும் கிடைக்காத ஒன்று ஏதோ ஒரு வகையில் தினந்தோறும் வேதனைகளை, சோதனைகளை அனுபவித்து வரும் அனைவருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் தங்களின் மனச்சங்கடங்கள் நீங்கி உற்சாகத்தை வெளிப்படுத்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்கள்.

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவஹர் உத்தரவின் பெயரில், மாநகர துணை கண்காணிப்பாளர் ஆறுமுகம் தலைமையில், விரிவான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.