Type Here to Get Search Results !

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வருகிறது

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை வருகிறது செப்டம்பர் மாதம் 15-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.இந்த திட்டத்தை செயல்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு துறைகளில் அதிகாரிகள் ஒருங்கிணைந்து இந்த திட்டத்தை செயல்ப டுத்த ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.ரேஷன் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் விண்ணப்பம், டோக்கன் வழங்கும் பணி இன்று முதல் தொடங்கியது. ரேஷன் கடை ஊழியர்கள் காலை 8 மணி அளவில் இந்த பணியை தொடங்கினர். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வீடு, வீடாக சென்று டோக்கன் மற்றும் விண்ணப்பம் வழங்கினர். அப்போது சம்பந்தப்பட்ட வீட்டின் பெண்ணிடம் ரேஷன் கார்டை வாங்கி சோதனை செய்து அவரிடம் கையொப்பம் வாங்கி கொள்கின்றனர். பின்னர் அவரிடம் விண்ணப்பம் வழங்கப்படுகிறது. அதில் முகாம்களின் நேரம், நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு வழங்குகின்றனர்.ஈரோடு மாவட்டத்தில் 1,207 ரேஷன் கடைகளில் உள்ள 7 லட்சத்து 63 ஆயிரத்து 316 குடும்ப அட்டை தாரர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்வது தொடர்பாக முகாம் 2 கட்டமாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக 639 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 586 இடங்களில் வருகிற 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 4-ந் தேதி வரை விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 2-வது கட்டமாக 568 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 544 இடங்களில் வருகிற ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் 2 கட்டங்களும் சேர்த்து 1207 ரேஷன் கடைகளுக்கு உட்பட்ட குடும்ப அட்டை தாரர்களுக்கு 1130 இடங்களில் விண்ணப்பித்தினை பதிவேற்றம் செய்யும் முகாம் நடைபெற உள்ளது. 3,777 அலுவலர்கள் ஈரோடு மாவட்டம் முழுவதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வீடுகளில் சென்று விண்ணப்பம் வழங்கி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.