சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் சார்பாக குப்பைகளை எரிக்கும் இயந்திரம் (INCINERATOR) வழங்கப்பட்டுள்ளது.
June 21, 2023
0
சென்னிமலை பேரூராட்சிக்குட்பட்ட இடத்தில் ரோட்டரி இன்டர்நேஷனல் மற்றும் ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் சார்பாக குப்பைகளை எரிக்கும் இயந்திரம் (INCINERATOR) வழங்கப்பட்டுள்ளது. திடக்கழிவு மேலாண்மை GG 1875567 என்ற திட்டத்தை உருவாக்கி குப்பைகள் இல்லாத ஈரோட்டை உருவாக்கும் முயற்சியில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் திட்ட செலவு ரூ : 20 லட்சம். இதன் துவக்க விழா இன்று செவ்வாய்க்கிழமை 20.06.2023 காலை 10.00 மணிக்கு சென்னிமலை பஞ்சாயத்தின் குப்பைகளை சேகரிக்கும் வளாகத்தில் ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக ஈரோடு மாவட்ட திட்ட கண்காணிப்பு அலுவலர் G.பிரகாஷ் கலந்து கொண்டார். ஒளிரும் ஈரோடு ஃபவுண்டேஷன் தலைவர் எம்.சின்னசாமி, துணைத்தலைவர் சிடி.வெங்கடேஸ்வரன் , செயலாளர் எஸ்.கணேசன் அவர்கள், சுற்றுச்சூழல் குழு தலைவர் திரு. B. தர்மராஜ் அவர்கள், உதவித் தலைவர் திரு. A. யோகேஷ் குமார் அவர்கள், ஈரோடு ரோட்டரி சங்கத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் KK.விஜயசந்திரன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர்கள் V.மோகன்ராஜ் மற்றும் MK.சிவக்குமார் மற்றும் சென்னிமலை பேரூராட்சி செயல் அலுவலர் V.ஜெயராமன் மற்றும் பேரூராட்சி தலைவர் ஸ்ரீ தேவி அசோக் மற்றும் அரசு அலுவலர்கள், மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
Tags