Type Here to Get Search Results !

சென்னை:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொது செயலாளர் எஸ்.சௌந்தர்ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில்

சென்னை:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை பொது செயலாளர் எஸ்.சௌந்தர்ராஜன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-வணிகர் மற்றும் தொழில் துறையினர் நலனில் அக்கறை கொண்டுள்ள தமிழக அரசு தற்பொழுது, ஏழு மாதத்திற்குள்ளாக மீண்டும் ஒருமுறை மின் கட்டணம் உயர்வு, அதுவும் குறிப்பாக வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில் துறையினருக்கு உயர்வு என்பது துரதிஷ்டவசமானது. இது வணிகத்தையும், உற்பத்தி தொழிலையும் கடுமையான பாதிப்பதோடு வணிகம் மற்றும் தொழில் வளர்ச்சியை பாதிக்க செய்து அரசுக்கு வரும் வரி வருவாய் குறைவதற்கான வழிவகையை ஏற்படுத்தும்.மத்திய அரசினுடைய உதய் மின் திட்டத்தை காரணம் காட்டி மின் கட்டண உயர்வு என்பது ஏற்புடையது அல்ல. மத்திய அரசினுடைய நீட் தேர்வு, மத்திய அரசினுடைய புதிய கல்விக் கொள்கை, இவ்வாறு மத்திய அரசினுடைய பல திட்டங்களை எதிர்த்து சட்டமன்றத்திலேயே தீர்மானம் கொண்டு வரும் தமிழக அரசு, இந்த உதய் மின் திட்டத்திற்கும் எதிர்ப்பு தெரிவித்து மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தவிர்த்திட வேண்டும்.தமிழக அரசு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மின் கட்டண கணக்கீட்டை 2 மாதத்திற்கு ஒரு முறை என உள்ளதை மாற்றி, பிரதி மாதம் கணக்கிடும் முறையினை கொண்டு வர வேண்டும்இவ்வாறு அதில் கூறியுள்ளார்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.