முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று பதில் அளித்துள்ளார்
June 16, 2023
0
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று பதில் அளித்துள்ளார் சென்னை:முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றுவீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்திருந்தார்.இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் விமர்சனத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்று பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறி இருப்பதாவது:-நேற்றைய தினம் செந்தில் பாலாஜியை ஊழல் குறித்து அமலாக்கத்துறை சோதனை நடத்தி அவரை கைது செய்தது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். அதில் அ.தி.மு.க. பற்றியும், என்னைப் பற்றியும், சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.அதுகுறித்து மக்களுக்கு முழு உண்மையை சரியான முறையில் தெரிவிப்பது எனது கடமை. அதனால் இந்த கருத்துக்களை நான் தெரிவிக்கின்றேன்.சுப்ரீம் கோர்ட்டில் செந்தில் பாலாஜியின் வழக்கு நடந்து வந்தது. அந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு அமலாக்கத் துறை, செந்தில்பாலாஜி வழக்கு குறித்து விசாரிக்கலாம். அதற்கு தடையில்லை. அதோடு 2 மாதத்தில் இந்த வழக்கை நடத்தி முடிக்க வேண்டும்.அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அதோடு அந்த வழக்கை 2 மாதத்தில் முடிக்காவிட்டால் சுப்ரீம் கோர்ட்டே சிறப்பு குழு ஒன்று அமைத்து விசாரிக்கப்படும் என்ற தீர்ப்பை வழங்கி இருக்கிறது.அதன் அடிப்படையில்தான் அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி வீடுகள், மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள அறைகளில் சோதனை நடத்தியது. அதோடு அவரும் விசாரிக்கப்பட்டார். நடைபயிற்சி சென்று விட்டு வீட்டுக்குள் நுழைந்து பத்திரிகையாளர்களை சந்திக்கின்றபோது
Tags