செந்தில்பாலாஜி வகித்து வந்த இலாகாக்களை தங்கம் தென்னரசுவுக்கும், முத்துசாமிக்கும் ஒதுக்க கவர்னர் ரவிக்கு தமிழக அரசு பரிந்துரை செய்துள்ளது.
நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு கூடுதலாக மின்சாரத்துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஒதுக்கீடு செய்யவும் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஆவணங்கள் கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
இலாகா இல்லாத அமைச்சராக செந்தில்பாலாஜி நீடிப்பார் என தெரிகிறது.