Type Here to Get Search Results !

ஈரோட்டில் இதயம் காப்போம் திட்டப் பேருந்தை திரைப்பட நடிகர் சத்தியராஜ் திறந்துவைத்தார்.

பொதுமக்களின் மத்தியில் இதயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், இலவச மருத்துவ முகாம்களின் மூலமாக மக்களுக்கு பரிசோதனையும், சிகிச்சையும் வழங்கிடவும் ஏற்ற வண்ணம் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பேருந்து ஒன்று பயன்பாட்டுக்கான திறப்பு விழா செய்யப்பட்டது. 13 ஆண்டுகாலமாக ஈரோடு சென்ட்ரல் ரோட்டரி சங்க உறுப்பினராகவும், ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமாய் இருந்த ஸ்ரீபதி ஸ்ரீனிவாசமூர்த்தி அவர்கள் இதய நோய் காரணமாக மாதங்களுக்கு முன் தனது இளம் வயதிலேயே காலமானார். ரோட்டரி - லோட்டஸ் சில அவரதுநினைவாக ஒளிரும் ஈரோடு ஆகியன இணைந்து இதயம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாக "இதயம் காப்போம்' என்றவொரு திட்டத்தை துவங்கியுள்ளன இத்திட்டத்திற்கு ஈசிஜி, இருதய ஸ்கேன் கருவி மற்றும்இரத்தபரிசோதனைக்கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய குளிர்சாதன வசதி கொண்ட பிரத்யேகப் பேருந்து இரண்டு கோடி மதிப்பீட்டில் வாங்கப்பட்டுள்ளது. இப்பேருந்தானது மருத்துவர்கள் குழுவோடு ஊர் ஊராகச் சென்று பொதுமக்களுக்கு இலவசமாக இதயமருத்துவப் பரிசோதனையையும், சிகிச்சை மற்றும் மருந்துப் பொருட்களையும் வழங்கும். இருதயம் மட்டுமின்றி பெண்களுக்கு மார்பகப்புற்றுநோய், கர்ப்பபை வாய்ப்புற்று நோய் போன்றவைகளை கண்டறியும் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். அதுதவிர, குடல் நோய்களை கண்டறிய குடல் உள்நோக்கிக்கருவியும், அதற்கான மருத்துவர்களும் இப்பேருந்துதில் இடம் பெற்றுள்ளனர். இரத்தப்பரிசோதனை மேற்கொள்ள லேப் வசதியும் இப்பேருந்தில் உள்ளது. இந்த இதயம் காப்போம் திட்டப் பேருந்தை திரைப்பட நடிகர் சத்தியராஜ் திறந்துவைத்தார். வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சார். சு. முத்துசாமி , தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் அவர்களும் இந்த விழாவுக்கு முன்னிலை வகித்தனர். ஈரோடு மாவட்ட ஆட்சியர் உயர்திரு. ராஜகோபால் சுன்காரா, ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பளர் G. ஜவகர், ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம், ரோட்டரி மாவட்டம் 3203-ன் ஆளுநர் உயர்திரு.B. இளங்குமரன் ஆகியோர் இவ்விழாவிற்கு தலைமை வகித்தனர். கௌரவ விருந்தினர்களாக சக்தி மசாலா தலைவர் திரு. PC. துரைசாமி இயக்குநர் . சாந்தி துரைசாமி , எக்ஸல் கல்வி நிறுவனங்களின் தலைவர் A.K.நடேசன், வேளாளர் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் . S.D சந்திரசேகர், ஆகியோர் கலந்துகொண்டனர். ஒளிரும் ஈரோடு பவுண்டேசன் தலைவர் மற்றும் நிர்வாகிகள் பல்வேறு ரோட்டரி சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், அரிமா சங்கங்களின் கவர்னர்கள், தலைவர்கள் நிர்வாகிகள், உறுப்பினர்கள் BNI சங்க தலைவர்கள், பொறுப்பாளார்கள் உறுப்பினர்கள், ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்க கூட்டமைப்பின் தலைவர், செயலர், உறுப்பினர்கள் என ஏராளமானோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.

வேளாளர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு ஸ்ரீபதி குழுமத்தை சார்ந்த ஸ்ரீபதி சேகர், ஸ்ரீபதி பூபதி மற்றும் ஸ்ரீபதி விமலா ஸ்ரீனிவாச மூர்த்தி ,ஆகியோரும் வருகை தந்திருந்தனர். ரோட்டரி ஹார்ட் கேர் டிரஸ்ட்டின் மூலம் நிறைவேற்ற ப்பட்டுள்ள இத்திட்டத்தைக் குறித்து அந்த டிரஸ்ட்டின் நிறுவனரும் லோட்டஸ் ஆஸ்பிட்டலின் நிர்வாக இயக்குநருமான டாக்டர். E.K. சகாதேவன்  கூறியதாவது லோட்டஸ் மருத்துவ மனையின் குடல் உள்நோக்கி அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். S. ஈஸ்வரமூர்த்தி, மகளிர் மருத்துவ நிபுணர் டாக்டர். E.S. உஷா, இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர். M. ஜெகதீஷ் பொது மருத்துவ நிபுணர் டாக்டர். S. கீர்த்தனா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவானது இப்பேருந்தின் மூலம் இலவச மருத்துவ முகாம்களை நடத்தும். பொதுமக்கள் தங்களது பகுதியில் இப்பேருந்தைக் கொண்டு இலவச மருத்துவ முகாம்களை நடத்த விரும்பினால் 73730 62828, 98427 66666 ஆகிய எண்களுக்குதொடர்பு கொள்ளலாம்.

மேலும் பலரின் உயிர்காக்கும் இந்த உன்னதத் திட்டத்திற்கு நன்கொடை வழங்க அனைவரும் முன் வரவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். டிரஸ்டடின் தலைவர் திருநாவுக்கரசு செயலர் பாலசுப்ரமணியம், பொருளர் பரணிதர் ஆகியோர் உடன் இருந்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.