Type Here to Get Search Results !

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு திறப்பு விழா காண்கிறது பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

அதிமுக கொண்டு வந்த திட்டங்களை திமுக அரசு திறப்பு விழா காண்கிறது பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் அனைத்து தொகுதிகளும் அதிமுக வெற்றி பெறும்
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு, ஜூன்.21-
ஈரோட்டில் இன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 13 ஆண்டுகள் எம்ஜிஆர் ஆட்சி செய்தார். 5 முறை ஜெயலலிதா முதல்வரானார். பிறகு இபிஎஸ் மாநிலத்தில் ஆட்சி செய்தார். அத்திக்கடவு அவினாசி குடிநீர் திட்டம் உட்பட பல நலத்திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு திட்டங்களை வழங்கினார். ஆனால், திமுக ஆட்சியில் எஸ்ஜிஎப்ஐ விளையாட்டுப் போட்டியில் கூட மாணவர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை. மின் விநியோகம் அவ்வப்போது தடைப்படுகிறது. பேருந்து சேவை குறைக்கப்பட்டதால் இலவச பேருந்து பயணமும் கிடைக்கவில்லை. கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் அதிகரித்து வருகிறது. பல பகுதிகளில் குடிநீர் வினியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது. வரி பல மடங்கு உயர்த்தப்பட்டது. வணிகர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் பால் விலை, சொத்து, தண்ணீர் வரி உயர்த்தப்பட்டது. மதுவின் மூலம் திமுகவுக்கு பல கோடி ரூபாய் தினசரி கிடைக்கிறது . நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என்ற தனது தேர்தல் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சியின் திட்டங்கள் மட்டுமே தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஊழலால் வரும் பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும். அதைத் தொடர்ந்து தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் 234 தொகுதியில் அதிமுக அபார வெற்றி பெறும்.
இவ்வாறு அவர் கூறினார்
 முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறியதாவது:-தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் ஊழல் தான் பிரதானமாக உள்ளது. ஆட்சியில் இருந்தவர்களுக்கு மது விற்பனை மூலம் மட்டும் தினமும் சராசரியாக 100 கோடி ரூபாய் சென்றது. அதிமுக ஆட்சியில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஈரோடு-மேட்டுப்பாளையம் சாலை, ரூ.900 கோடியில் ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டம், ஈரோடு ஜி.ஹெச்.யில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிரிவு உள்ளிட்ட பல வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் எந்த வளர்ச்சிப்பணிகளும்நடைபெறவில்லை. இவ்வாறு அவர் கூறினார். பெருந்துறைன. பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர்கள்JK@S.ஜெயக்குமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கேவிஆர் ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தென்னரசு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லக்குமார் சின்னையன், பெரியார் நகர் மனோகர்,வீரகுமார், வக்கீல்கள் துரைசக்திவேல் ,துரைசாமி, மற்றும் மல்லிகாபரமசிவம், கே.சி.பழனிச்சாமி, கேசவமூர்த்தி, நல்ல சிவம், உட்பட ஏராளமான ஆகிய அதிமுக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.